கோலாலம்பூர் | 26/7/2021 :-
இன்று கோலாலம்பூர் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையிலான மருத்துவர்கள் தொடர்பான மறியல் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.
டாங் வாங்கி மாவட்டக் காவல்துறை தலைவர் உதவி ஆணையர் முகம்மது ஸைனால் அப்துல்லா இது குறித்து தெரிவிக்கயில், சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநரின் அனுபதியின்றி யாரும் ஒன்றுகூடக் கூடாது எனக் கூறினார்,
அவ்வாணையானது சமயம், சமூகம், விளாஇயாட்டு, திருமணம், பண்பாடு போன்ற எந்த அவகைக்கும் பொருந்தும் என அவர் மேலும் சொன்னார்.
அரசுத் துறையில் நிரந்தர வேலை கோரி நாடு முழுவதும் பல நூறு ஒப்பந்த அடிப்படையிலான மருத்துவர்கள் இந்தப் போராட்டத்தில் இணைந்தனர்.
சுங்கை பூலோ மருத்துவமனையில் இருந்து 100 ஒப்பந்த அடிப்படையிலான மருத்துவர்களும், கோலாலம்பூர் மருத்துவமனையில் இருந்து 50 பேரும் ஷா ஆலம் மருத்துவமனையில் இருந்து 30 பேரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டதாக நம்பப்படுகிறது.
புத்ராஜெயா மருத்துவமனையில் புகழ்பெற்ற டாக்டர் ரஃபிடா அப்துல்லாவும் சிறுநீரக சிகிச்சைப் பிரிவின் 40 மருத்துவ ஊழியர்களும் அப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேலும், கெடா, கிளாந்தான், பேரா, பெர்லிஸ், நெகிரி செம்பிலான் போன்ற மாநிலங்களில் உள்ள ஒப்பந்த அடிப்படையிலான மருத்துவர்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
காவல்துறை தடுப்பு ஏற்படக்கூடிய அச்சம் உள்ளதால், செர்டாங் தனிமைப்படுத்தல் மையத்தில் அப்போராட்டம் நடத்தப்படவில்லை.
கடந்த வெள்ளிக்கிழமை, ஒப்பந்த அடிப்படையிலான மருத்துவர்களுக்கு நான்கு ஆண்டுகள் வேலை நீட்டிப்பும் நிரந்தர மருத்துவர்களுக்கு வழங்கப்படும் அனைத்துச் சலுகைகளும் வழங்கப்படு என அரசு அறிவித்திருந்தது.
இருந்தும், அம்முடிவு அரைவேக்காடு முடிவு என போராட்டக் குழுவினர் சித்தரித்தனர்.
அவர்கள் செய்த பதவி உறுதிமொழியைச் சுட்டிக்காட்டிய சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் தான் ஶ்ரீ டத்தோ ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா, அப்போராட்டத்தில் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என நேற்று அறிவுறுத்தினார்.


