Homeமலேசியாதற்காப்புப் படை, காவல் படையினருக்கு மாமன்னரும் அரசியாரும் மாவீரர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர் !

தற்காப்புப் படை, காவல் படையினருக்கு மாமன்னரும் அரசியாரும் மாவீரர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர் !

கோலாலம்பூர் | 31/7/2021 :-

அனைத்துத் தற்காப்புப் படையினருக்கும் காவல் படையினருக்கும் மாமன்னரும் அரசியாரும் மாவீரர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்

அரண்மனையின் முகநூல் பக்கத்தில் வாயிலாகத் தெரிவிக்கப்பட்ட வாழ்த்துகளில், கோவிட்-19க்கு எதிரானப் போராட்டத்தில் முன்களப் பணியாளராகச் சேவையாற்றும் தற்காப்புப் படையினருக்கும் காவல் படையினருக்கும் அவர்கள் இருவரும் தங்களின் பாராட்டைத் தெரிவித்தனர்.

மேலும், நாட்டின் முதன்மைத் தலைவராகவும் தற்காப்புப் படையின் உயர் தலைவராகவும் இருக்கும் மாமன்னர், இறையாண்மையையும் பாதுகாப்பையும் காக்கப் போராடும் அவர்களுக்குத் தமது வாழ்த்தினைக் கூறிக் கொண்டார்.

பணியில் ஈடுபட்டு உயிர் நீத்த மாவீரர்களின் குடும்பத்தாருக்கும் மாமன்னர் தமது வாழ்த்தினைத் தெரிவுத்தார்.

அவ்வாறு தாயகத்திற்காக உயிர் நீத்தவர்களின் ஆதன் இறைவனின் ஆசி பெறட்டும் என அந்த முகநூல் பதிவில் மாமன்னர் குறிப்பிட்டிருந்தார்.

1960இல் கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான ஊரடங்கு காலத்தின்போது நாட்டிற்காகப் போராடி உயிர் நீத்த மாவீர்களை நினைவு கூறும் நோக்கில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 31 ஆம் நாள் மாவீரர் நாள் என அறிவிக்கப்பட்டது.

spot_img

latest articles

explore more