Homeகுற்றவியல்இதுவரையில் 10 பேர் தடுப்பூசி போட்டுவிட்டதாகப் போலிச் சான்றிதழைப் பயன்படுத்தியுள்ளனர் ! – துணை அமைச்சர்

இதுவரையில் 10 பேர் தடுப்பூசி போட்டுவிட்டதாகப் போலிச் சான்றிதழைப் பயன்படுத்தியுள்ளனர் ! – துணை அமைச்சர்

கோலாலம்பூர் | 15/9/2021 :-

இதுவரையில் தடுப்பூசி போட்டுவிட்டதாகப் போலிச் சான்றிதழைப் பயன்படுத்திய 10 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என உள்துறை துணை அமைச்சர் இஸ்மாயில் முகம்மட் சயிட் தெரிவித்தார்.

சரவாக்கில் நால்வரும், சபாவில் இருவர், மலாக்காவில் இருவர், கிளாந்தான் பேராவில் தலா ஒருவர் இக்குற்றத்தைப் புரிந்துள்ளனர்.

சரவாக்கில் இந்த ஏமாற்று வேலையை செய்த ஒருவருக்கு நீதிமன்றம் சிறைத் தண்டணையை வழங்கியது.

இது போன்றக் குற்றத்தைப் புரிகிறவர்கள் மீது தொற்றுநோய் கட்டுப்பாடு, தடுப்புச் சட்டம் 1988 பிரிவு 22இன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அதே சட்டத்தின் பிரிவு 24இன் படி குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால், ரிம 100,000 மேற்போகாத தண்டம் அல்லது 7 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

பிரிவு 25இன்படி, நீதிமன்ற குற்றச்சாட்டுக்கு முன்னர் க்குற்றத்தைப் புரிந்த தனி நபருக்கு ரிம 10,000 மேற்போகாத தண்டமும் நிறுவனத்திற்கு ரிம 50,000 மேற்போகாத தண்டமும் விதிக்கப்படலாம்.

spot_img

latest articles

explore more