Homeமலேசியாஇலங்காவிக்குச் செல்லும் முன் கோவிட்-19 பரிசோதனை அவசியம் !

இலங்காவிக்குச் செல்லும் முன் கோவிட்-19 பரிசோதனை அவசியம் !

கோலாலம்பூர் | 15/9/2021 :-

சுற்றுலாத் தலமான இலங்காவிக்குச் செல்லும் முன்னர் கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்வது கட்டாயம் என சுகாதார அமைச்சு கூறியது.

அதன் அமைச்சர் கைரி ஜமாலுதீன் அவ்விவகாரம் குறித்து தெரிவிக்கயில், ஆர்டி-பிசிஆர் சோதனைகள் மூலம் சுற்றுப்பயணிகள் இலங்காவிக்கு வருவதற்கு 48 மணி நேரத்திற்கு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறினார். அந்தப் பரிசோதனையை எந்த சுகாதார மையத்திலும் செய்யலாம்.

விமான நிலையங்கலோலோ அல்லது படகு முனையங்களின் நுழை வாயில்களிலோ அந்தப் பரிசோதனை முடிவுகளைக் காட்ட வேண்டும்.

ஒரு திருப்பமாக, நாளை தொடங்கும்  பயணக் குமிழி திட்டத்தின் கீழ் இலங்காவி சுற்றுப்பயணிகளை ஏற்றூக் கொள்ள இருக்கும் நிலையில் அங்கு புதியத் திரள்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என கைரி கூறினார்.

மேலும், சுய பரிசோதனைக் கருவிகளை சொந்தமாக வாங்கி விமான நிலையங்கலோலோ அல்லது படகு முனையங்களின் நுழை வாயில்களிலோ ஏற்பாடு செய்திருக்கும் தனி இடங்களில் செய்து கொள்ளாலாம்.

இந்தப் பரிசோதனை 18 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் மீதும் 7 வயது முதல் 17 வயது இளையோர் மீதும் செய்யப்படும்.

6 வயதுக்கும்  குறைவான குழந்தைகளுக்கு, அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பரிசோதனை கட்டாயமாகும். சோதனைகள் உமிழ்நீரை உற்பத்தி செய்ய முடியுமா இல்லையா என்பதைப் பொறுத்தது.

குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் முழுமையான தடுப்பூசியைப் போடப்பட்டிருக்க வேண்டும். கோவிட் -19 தொற்று கண்டவருடன் நெருங்கிய தொடர்பு கொள்ளாதவர்கள் உடன் இருக்க வேண்டும்.

சுற்றுலாத் திட்டத்திற்காக பயணாக் கட்டுப்பாட்டை மட்டுமே அரசாங்கம் தளார்த்தி உள்ளது. மற்றபடி, முகக்கவரி அணிவது, கூடல் இடைவெளி, கைகளைக் கழுவுதல் போன்ற பிற சுய கட்டுப்பாட்டு பொது சுகாதார நடவடிக்கைகளை சுற்றுப் பயணிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கைரி வலியுறுத்தினார்.

பொதுமக்கள் இந்த தளர்வுகளை அலட்சியப் படுத்தினார், தொற்றுநோய் நிலைமை மோசமடையும் என்று அவர் கூறினார்.

முன்னதாக, சுற்றுலாத்துறை அமைச்சர் நான்சி சுக்ரி, தீவுக்கு வருபவர்கள் கோவிட் -19 க்கு பரிசோதனை செய்யத் தேவையில்லை என்று அறிவித்திருந்தார்.

spot_img

latest articles

explore more