கோலாலம்பூர் | 16/12/2021 :-
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த கும்பல் கொள்ளையில் சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இரு ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் மீது காவல் துறை விசாரணை நடத்தப்படுகிறது.
நேற்று ஊழல் தடுப்பு ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், அந்த விசாரணைக்குத் தமது தரப்பு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகக் குறிப்பிட்டது.
அந்தக் கும்பல் கொள்ளையில் ரிம 700,000 மதிப்பிலான பணம் களவாடப்பட்டது.
இது போன்ற எந்த விதமானக் குற்றத்தில் ஈடுபடுவோருக்கும் பாதுக்கப்பையோ அல்லது ஆதரவையோ ஆணையம் வழங்காது எனவும் அவர்கள் மீது உடனடி விசாரணை நடத்தப்பட ஆவன செய்யும் எனவும் அது கூறியது.


