பூச்சோங் | 16/12/2021 :-
இங்குள்ள காசல்ஃபீல்டு தமிழ்ப்பள்ளியின் இளம் அறிவியலாளர் குழுவினர் அனைத்துலக இளம் புத்தாக்கக் கண்காட்சியில் 2 தங்கப்பதக்கங்களையும் 3 வெள்ளிப் பதக்கங்களையும் வென்று சாதனை புரிந்துள்ளார்கள்.
ITEX 2021 நடத்திய World Young Inventors Exhibition 2021 போட்டியில் 12 நாடுகளைச் சேர்ந்த 121 குழுக்கள் கலந்து கொண்டன.

கடந்த 13 – 14 ஆம் நாள் கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் (KLCC) நடந்த இப்போட்டியில் காசல்ஃபீல்டு தமிழ்ப்பள்ளி இயங்கலை வாயிலாக கலந்து கொண்டது.
காசல்ஃபீல்டு தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 5 குழுக்களில் 22 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

வெள்ளிப்பதக்கம் வென்ற புத்தாக்கக் கண்டுபிடிப்புகள்
1. Covid-19 Shopping Mall Crowd Control System
2. HALO – Home Auto Light Off
3. Covid-19 Smart Face Mask Disposal Bin

தங்கப்பதக்கம் வென்ற புத்தாக்கக் கண்டுபிடிப்புகள்
1. Natural Lip Balm
2. Appatha’s Energy Cookies
கலந்து கொண்ட நாடுகள்
சீனா, சிங்கப்பூர், வியட்னாம், கத்தார், அரேபியா, துருக்கி, யூகெரேன், ஹாங்காங், இந்தோனேசியா, தைவான், தாய்லாந்து, மலேசியா

இப்போட்டியில் கலந்து கொண்டு சிறப்பான அடைவு நிலையைப் பதிவு செய்த காசல்பீல்டு தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கு அதன் பெற்றோர் ஆசிரியர் சங்கம் வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு ஆதரவு அளித்த பள்ளிப் புறப்பாட நடவடிக்கை ஆசிரியர் மாலதிக்கும் தலைமையாசிரியை கற்பகத்திற்கும் நன்றியைத் தெரிவிப்பதாக பெ.ஆ. சங்கத்தின் செயலவை உறுப்பினர் கோபி தகவல் அளித்தார்.


