கோலாலம்பூர் | 17/12/2021 ;-

நாட்டின் 15வது பொதுத் தேர்தல் மிக விரைவில் நடத்தப்பட வேண்டாம் என ம.இ.கா. வின் தேசியத் தலைவர் தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மக்கள் வாக்களிக்க வெளியே வர ஏதுவானக் காலத்தில் நடத்தப்பட வேண்டுமே அன்றி, கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் அல்ல எனக் குறிப்பிட்டார்.

தேர்தலை எப்போது வேண்டுமானாலும் நடத்தலாம். ஆனால், தேர்தல் அனலை மக்கள், எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி அரசாங்கமும் உணர்ந்து அதற்கானப் பணிகள், குறிப்பாக பரப்புரைகளுக்கு முழு இடமளிக்கும் காலத்தில் நடத்தப்பட வேண்டும் என்றார்.

தேசிய முன்னணியில், அம்னோ, மசீச ஆகியவற்றோடு ம.இ.கா.வும் இடம்பெறுகிறது.

முன்னதாக, 15வது பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அம்னோவில் ஒரு தரப்பினர் கூறி வந்தனர்.

மலாக்கா மாநிலப் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தேர்தலை விரைவுப் படுத்த வேண்டும் என அதன் தலைவர் அகமாட் ஸாஹ்ஹிட் ஹமிடி கூறி வந்தார்.

நம்பிக்கைக் கூட்டணிக்கும் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் தலைமையிலான அரசாங்கத்திற்ௐஉம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தமானது தேர்தலை விரைவுப் படுத்துவதைத் தடுக்கும் முட்டுக் காட்டையாகப் பார்க்க முடியாது எனக் கூறினார்.