கோலாலம்பூர் | 27/12/2021 :-
தற்போது கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கி வரும் Prasarana Malaysia Berhad (Prasarana)-இன் தொடர்வண்டி, பேருந்துகளுக்கான வரம்பற்ற சேவைகள் தொடர்பான My30 திட்டம் அடுத்தாண்டு My50 ஆக மாற்றப்பட இருப்பதை போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெரிவித்தார்.
முன்னதாக, PENJANA பொருளாதாரத் திட்டத்தின்கீழ் மலேசியர்ர்களுக்கான அறிவிக்கப்பட்ட My30 சனவரி 1 முதல் My50 ஆக மாற்றப்பட உள்ளது.
My30 எதிர்வரும் 31/12/2021 ஆம் நாள் வரை மட்டுமே மக்களுக்காக நடப்பில் இருக்கும். இது குறித்து 2022 வரவு செலவுத் திட்டத்தில் நிதியமைச்சர் அறிவித்திருந்தார்.
மாதாந்திர வரம்பற்றப் பயணத்திற்கான கட்டணம் ரிம 200. ஆனால், அதனை ரிம 50 ஆகக் கொடுக்கும்போது எஞ்சிய ரிம 150 செலவை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது என வீ கா சியோங் தெரிவித்தார்.
அதே சமயம், பினாங்கில் செயல்பட்டு வரும் Rapid Penang பேருந்து சேவைக்கும் My50 திட்டம் வழங்கப்படுகிறது.


