Homeஆன்மீகம்தைப்பூசம் 2022 : 1,000 பேருக்கும் 10 இடங்களில் மட்டுமே வெள்ளித் தேரை நிறுத்தவும் அனுமதி...

தைப்பூசம் 2022 : 1,000 பேருக்கும் 10 இடங்களில் மட்டுமே வெள்ளித் தேரை நிறுத்தவும் அனுமதி ! – தேவஸ்தானத்தின் கோரிக்கைகள்

கோலாலம்பூர் | 27/12/2021 ;-

அடுத்த ஆண்டு தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கோலாலம்பூர் மகா மாரியம்மன் கோவிலில் இருந்து பத்துமலை திருத்தலத்திற்குச் செல்லும் வழியில் 10 இடங்களில் மட்டுமே நிறுத்தப்பட கோலாலம்பூர் மகா ம்மாஎஇயம்மன் தேவஸ்தானம் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

அந்த 10 இடங்களின் பட்டியல் :

1. Maybank (just after Pudu roundabout)

2. Lebuh Ampang

3. Dang Wangi IPD ( Jln Dang Wangi)

4. Jalan Raja Laut ( Orkid Hotel)

5. Perkim Building (Jln Ipoh)

6. Sentul Thandayuthapani Chettiar Temple

 ( 2 1/2 mile Jln Ipoh.

7. Kg Kasipillay ( HSBC Bank – Jln Ipoh)

8. Batu Kompleks (Malaysia Nanban office – 3 1/2 mile Jln Ipoh)

9. Batu Cantonment (4th mile Jln Ipoh)

10. Kg Batu (5th mile Jln Ipoh)

இந்த இடங்களின் நிறுத்தப்பட்டு பத்துமலை முருகன் திருத்தலத்தை வெள்ளித் தேர் வந்தடை பரிந்துரைக்கப்படுள்ளது

பரிந்துரைக்கப்பட்டத் தேர் ஊர்வல விதிமுறைகள்

ஒவ்வொரு நிறுத்தத்திலும் SOP விதிமுறை பின்பற்றப்படுவதை அரசாங்க அதிகாரிகள் கண்காணிப்பார்கள். தடுப்பூசி முழுமையான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி. அனைவரும் முகக்கவரி அணிந்திருக்க வேண்டும்.

மை செஜாத்தெரா செயலியில் வருகையைப் பதிவு செய்யப்படுவதுடன் உடல் வெப்பநிலை பரிசோதனையும் மேற்கொள்ளப்படும்.

சனவரி 16 ஆம் நாள் துன் எச். எஸ். லீ சாலையில் இரவு 10 மணிக்குத் தேர் ஊர்வலம் தொடங்கும்,

அனுமதிக்கப்படும் 1,000 பேர் பக்தர்கள் தேர் ஊர்வலத்தில் கலந்து கொள்ள முன்னதாகவே பதிவு செய்திருக்க வேண்டும்.

விதிமுறைகளை மீறும் தரப்பு மீது அதிகாரத்துவத்தினர் தக்க நடவடிக்கை எடுப்பர்.

குறிப்பிட்ட தூரத்தில் இருந்து பொது மக்கள் தேர் ஊர்வலத்தைக் கண்டுகளிக்கலாம். ஆனால், தேர் ஊர்வலத்தில் கலந்தும்கொண்டு தேருடன் வர முடியாது.

கடைகள் குறித்த பரிந்துரைக்கப்பட்ட விதிமுறை :

குறிப்பிட்ட 10 நிறுத்தங்களில் SOP கட்டுப்பாடுகளுடன் தண்ணீர் பந்தல்களுக்கு அனுமதி.

பத்துமலைத் திருத்தலத்திற்கு உள்ளே சில கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு கடை நடத்த விரும்புவோர், இணையத்தளம் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.

முதலில் விண்ணப்பிப்பவர்கள்ளுக்கு முதல் வாய்ப்பு வழங்கப்படும்.

கடை நடத்துவோரும் மைசெஜாத்தெரா வருகைப் பதிவையும் உடல் வெப்பநிலை பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும். வாடிக்கையாளர் அனைவரும் முகக்கவரி அணிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பத்திற்கான இணைப்பு : https://docs.google.com/forms/d/e/1FAIpQLScfwtMLhOdAMI72rSY2feBBq5rS91Xi3cUN070Lph6Rvqn0xA/viewform

  • அனுமதிக்கப்படாதவைகள் (பரிந்துரை) :
  • அன்னதான பந்தல்கள்
  • பத்துமலைத் திருத்தலத்தின் வெளியில் கடைகள்
  • தண்ணீர் பந்தல்கல்
  • முடி காணிக்கை சேவைகள் கடைகள்

பத்துமலைத் திருத்தலத்தில் ஏற்கெனவே நிரந்தரக் கடைகளலிருக்கின்றன. அவற்றில் பக்தர்களுக்குத் தேவையானவை விற்கப்பட ஆவண செய்யப்படும்.

200 காவடிகளுக்கு மட்டுமே அனுமதி – பரிந்துரை

16/1/2022 முதல் 19/1/2022 வரையில் மொத்தமாகவே 200 காவடிகளுக்கு மட்டுமே அனுமதி

ஒவ்வொரு காவடிக்கும் ஆதரவாக உடன் 10 பேருக்கு மட்டுமே அனுமதி.

அவ்வெண்ணிக்கையில் நாதஸ்வரம், தவில் ஆகியவற்றுக்கு மட்டுமே அனுமதி.

பத்துமலைத் திருத்தலத்தின் உள்ளேயும் வெளியேயும் காவடிகளுடன் உருமி மேளக் குழுவினருக்கு அனுமதி இல்லை.

அனைத்து 200 காவடிகளும் முன்னதாகவே பதிவு செய்யப்பட வேண்டும். அது தேவஸ்தானத்தின் அலுவலகத்தில் மேற்கொள்ள வேண்டும்.

காவடி ஏந்துபவர்களும் அவர்களுடன் வருகிற 10 ஆதரவாளர்களும் முகக்கவரி அணுவது கட்டாயம்.

ஆற்றங்கறையில் குளித்தல், அலகு குத்துதல் போன்றவற்றுக்கு அனுமதி.

பத்துமலைத் திருத்தலத்தில் முடிக் காணிக்கை செலுத்தும் சேவை கோவில் நிர்வாகமே ஏற்பாடு செய்கிறது.

காது குத்துதலுக்கு அனுமதி இல்லை.

பால் குடம் சம்பந்தமான பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகள் :

பால் குடம் ஏந்துபவர்கள் ஒரு நேரத்தில் 50 ஒஏருக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

அதற்கானக் கட்டணத்தைச் செலுத்தி இரசீதைப் பெற்றிருக்க வேண்டும்.

பால் குடம் வேண்டுதல் செலுத்தப்படும் நடவடிக்கை சற்றே மெதுவாக நடத்தப்படும். இடையிடையில் தொற்றூ நீக்கல் தூய்மைப்பணி மேற்கொள்ளப்படும்.

இயன்றவரை தைப்பூச நாளுக்கு முன்னதாகவே பால் குடம் வேண்டுதலை செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

உறுமி மேளம் தொடர்பான்ன பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகள் :

தேர் ஊர்வலத்தின் போது காவடியுடனும் உறூமி மேளக் குழுக்களுக்கு அனுமதி இல்லை.

தேருக்கு முன்னர் கோலாட்டக் குழுக்களுக்கும் அனுமதி இல்லை.

முழுமையாக நாதஸ்வரம், தவில் இசைக்கருவிகளுக்கு மட்டுமே அனுமதி.

கூடுதல் பரிந்துரைகள் விரைவில்…

தைப்பூசத் திருவிழாவைத் தொடர்புப் படுத்திய கோவிட்-19 திரள் ஏற்படாமல் இருக்க முழுமையாக SOP களைப் பக்தர்கள் பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பாக கூடல் இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் எனவும் தேவஸ்தானத்தின் முகநூல் பக்கத்தில் அதன் தலைவர் தான் ஶ்ரீ டத்தோ நடராஜா பதிவு செய்தார்.

spot_img

latest articles

explore more