சென்னை | 2/1/2022 :-

தமிழகத்தில் கடந்த மே மாதம் நாள் ஒன்றுக்கு 30,00க்கும் மேற்பட்டோர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், ஜூன் மாதம் படிப்படியாக குறையத் தொடங்கியது. அந்த வகையில் ஜூன் மாத இறுதியில் கோவிட்-19 தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,000க்குக் கீழ் குறைந்தது. தொடர்ந்து வேகமாக குறைந்த தொற்று கடந்த நவம்பர் மாதம் முதல் 1,000க்குக் கீழ் வந்தது.

கடந்த 2 மாதங்களாக குறைந்த எண்ணிக்கையிலான கோவிட்-19 தாக்கம் இருந்து வந்த நிலையில் தற்போது, மீண்டும் 1,000க்கும் மேல் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

2022 புத்தாண்டு தொடங்கிய நிலையில் கோவிட்-19 பாதிப்பு உயரத் தொடங்கியுள்ளது. பொதுமக்களிடையே 3-வது அலை ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில்  நேற்றைய கோவிட்-19 பாதிப்பு குறித்து மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழகத்தில் மேலும் 1,489 பேருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னையில் மேலும் 682 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,749,534 ஆக உயர்ந்துள்ளது.  சென்னையில் மேலும் 682 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது .

கோவிட்-19 பாதிப்பால் நேற்று 8 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,784-ஆக உயர்ந்துள்ளது. கோவிட்-19 பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை வ்,340 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

 கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 611 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2,404,410 பேர் மொத்தம் குணம் அடைந்துள்ளனர்.