Homeமலேசியாமீகூன் உட்பட மாவு சார்ந்த உணவுப் பொருட்கள் விலை உயருமா ?

மீகூன் உட்பட மாவு சார்ந்த உணவுப் பொருட்கள் விலை உயருமா ?

கோலாலம்பூர் | 4/1/2022 :-

மூன்று வகையான மாவுகள் விலை அதிகரித்துள்ள நிலையில் அதனைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மீகூன் உட்பட சில உணவுப் பொருட்கள் விலை உயரக் கூடும் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து கருத்துரைத்த மலேசிய மீகூன் ஆலைகள் சங்கத் தலைவர் ஹோங் ஸூ டியான், மீகூனை உற்ப்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் சோள மாவு, கிழங்கு மாவு, சௌவரிசி மாவு ஆகியன விலை உயர்ந்துல்ளதாகத் தெரிவித்தார்.

தற்போதையச் சூழலில், ஒரு கிலோ மீகூன் ரிம 4.20 ஆக விற்கப்படுகிறது.

மூலப் பொருட்கள் விலை உயர்வால் மீகூன் தயாரிக்கும் ஆலைகள் 20 சென் முதல் 40 செப் வரையில் விலையை உயர்த்தத் தயாராக இருப்பதாகவும் அவர் சொன்னார்.

மாவு விலை அதிகரிப்பைத் தவிர, சந்தையில் சௌவரிசி மாவுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாலும் மீகூன் விலை உயர முக்கியக் காரணமாக உள்ளது.

அதே சமயம், எரிபொருள் விலை உயர்வாலும் நிலைமை மேலும் சிக்கலுக்குள்ளானது என ஹோங் ஸூ டியான் சொன்னார்.

தொழிலாளர் பற்றாக் குறையால் தற்போது கைவசம் இருக்கும் தொழிலாளர்களுக்கு சில சலுகைகள் வழங்க வேண்டியுள்ளது, எனவே, அந்தப் பிரச்சனையும் மீகூன் இலை உயரக் காரணமாக அமைகிறது என அவர் குறிப்பிட்டார்.

இருந்தாலும், மீகூன் விலை அதிகரிக்க இருப்பதை வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும் எனவும் அதற்கானத் தயார் நிலையில் இருக்க அவர்களுக்கு ஏதுவாக இருக்கும் என ஹோங் ஸூ டியான் மேலும் தெரிவித்தார்.

மாவுகளின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து அதனைச் சார்ந்து இருக்கும் வெதுப்பிகள் (ரொட்டி), மாச்சில் (பிஸ்கட்) உட்பட இன்னும் சில உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்கக் கூடும் என சைனா பிரஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

முன்னதாக, 1.1.2022 முதல் 25 கிலோகிராம் எடை கொண்ட மாவு ரிம 5.00 அல்லது 10 விழுக்காடு வரையில் விலை அதிகரிப்பைச் சந்திக்கும் என அந்நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.

ஆனால், 2021 ஆம் ஆண்டில் ரிம 47 – ரிம 51 வரையில் இருந்த மாவுகளின் விலை இவ்வாண்டு முதல் ரிம 52 – ரிம 56 வரையில் உயர்ந்துள்ளன.

இருந்த போதிலும், அரசு மானியம் பெற்ற பொது மக்கள் பயன்பாட்டிற்கு உண்டான மாவுகளின் விலை விலை அதிகரிப்பைச் சந்திக்க வில்லை.

spot_img

latest articles

explore more