சென்னை | 5/1/2022 :-
உருமாறிய ஒமைக்ரான் வகை கோவிட்-19 தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு ஆணை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் கொண்டாட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், கோவிட்-19 தடுப்பிற்கான புதிய கட்டுப்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் ஆலோசானை நடத்தி வருகிறார்.
சென்னை கலைவானர் அரங்கில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
கோவிட்-19 பரவல் அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கு, பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்குப் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது, விழாக்களில் கூட்டத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக கட்டுபாடுகள் விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புகளைத் தவிர மற்ற மாணவர்களுக்கு விடுப்பு அல்லது ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படலாம் என்பது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.