கோலாலம்பூர் | 5/1/2022 :-
பகாங், சிலாங்கூர், ஜோகூர், மலாக்கா, சபா ஆகிய மாநிலங்களில் சில ஆறுகளின் நீர் மட்டம் அபாய நிலையை எட்டியுள்ளதால் அப்பகுதிகளில் எச்சரிக்கையை விடுத்துள்ளது வடிகால், நீர்ப்பாசனத் துறை.
பகாங்
பெரா ஆறு, அதனைக் கடக்கும் பால, பகாங் ஆறு ஆகியப் பகுதிகளில் நீர் மட்டம் அபாய நிலையில் உள்ளது. .
செர்த்திங் ஆற்றைக் கடக்கும் பாடாங் கூடாங் பகுதியில் நீர் மட்டம் அபாய நிலையில் இருந்தாலும் அது கட்டம் கட்டமாக இறங்கு முகத்தைப் பதிவு செய்துள்ளது. .
சிலாங்கூர்
சபாக் பெர்னாமில் பெர்னாம் ரிம்பா கேடிஆர் ஆற்றின் நீர் மட்டம் அபாய நிலையில் இருப்பதாகவும் அது மேலும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோகூர்
சிகாம்மாட், கம்போங் ஆவாட்டில் மூவார் ஆறு, தங்காக் கம்போங் ஶ்ரீ மாக்மூரில் தங்காக் ஆறு ஆகியவற்றின் நீர் மட்டம் அபாய நிலையில் இருந்தாலும் அது கட்டம் கட்டமாக இறங்கு முகத்தைப் பதிவு செய்துள்ளது. .
மலாக்காவின் பத்து ஹம்பாரின் மலாக்கா ஆற்றீன் நீர் மட்டமும் சபாவின் பெடாஸ் ஆற்றின் நீர் மட்டமும் அபாய நிலையைப் பதிவு செய்துள்ளது.


