கோலாலம்பூர் | 12/1/2022 :-
எதிர்வரும் 18/1/2022 ஆம் நாள் தைப்பூசத் திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில், அது குறித்த SOP விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் இன்று அறிவிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தற்போது ஓமைக்ரோன் வகை கோவிட்-19 பெருந்தொற்று மிகத் தீவிரமடைந்துள்ள நிலையில் கடுமையானக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தைப்பூசம் கொண்டாடப்பட மலேசிய மக்கள் குறிப்பாக இந்துக்கள் காத்திருக்கின்றனர்.
ஒருமைப்பாடு அமைச்சர் ஹலிமா சாடிக், நாட்டின் மிக முக்கியமாக தைப்பூசத் திருவிழா நடத்தப்படும் திருத்தலங்களுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு அதன் அடிப்படையில் அவர் SOP விதிமுறைகளை வெளியிடலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும், தைப்பூசத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்வாண்டு அது நடத்தப்பட பலவாறான முயற்சியை மேற்கொள்ளும் மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ மு சரவணனும் அவ்வறிவிப்பின்போது கலந்து கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பத்துமலையில் பக்தர்கள் விதிகள் மீறப்பட்ட சம்பவம் தொடர்பில் கோலாலம்பூர் ஸ்ரீ மாரியம்மன் தேவஸ்தானத்திற்கு காவல்துறையால் தண்டம் விதிக்கப்பட்டது.
இறுதி நேரத்தில் நெரிசலைத் தவிர்க்கும் வகையில் முன்கூட்டியே நேர்த்திக் கடனை பூர்த்தி செய்யுங்கள் என பக்தர்களுக்கு கோலாலம்பூர் மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் தலைவர் தான் ஶ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டிருந்தார்,.
இதனால் ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் பத்துமலையில் தங்களின் நேர்த்திக் கடன் பூர்த்தி செய்தனர்.
ஆனால் பல பக்தர்கள் விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளனர்.
உறுமிமேளம், பொங்கோ வாத்தியங்களை வாசித்துள்ளனர். கூட்டம் கூட்டமாக நின்றுக் கொண்டிருந்தினர். பலர் முகக் கவசம் கூட அணியவில்லை.
பத்துமலையில் நிகழ்ந்த இச் சம்வங்கள் வீடியோ எடுக்கப்பட்டது. அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.
இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்று எச்சரித்துடன் ஓயில் நிர்வாகத்திற்கு கோம்பாக் மாவட்டக் காவல்துறை தண்டம் விதித்தது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அடுத்தடுத்து இது போன்றூ நடக்காமல் இருக்க காவடிகளுக்கு எதிர்வரும் 17 ஆம் தேதி வரையில் அனுமதி இல்லை என தேவஸ்தானத் தலைவர் நடராஜா காணொலி வாயிலாக அறிவித்தார்.


