கோலாலம்பூர் | 12/1/2022 :-
தைப்பூசத் திருவிழா பொது விதிமுறைகள்
1. 14/1/2022 முதல் 19/1/2022 வரை பால் குடம் ஏந்தி வந்து நேர்த்திக் கடன் செலுத்தலாம்.
2. காவடிகளுக்கு அனுமதி இல்லை.
3. தைப்பூசத் திருவிழாவில் கலந்து கொள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் அவர்கள் தடுப்பூசியை முழுமை செய்திருக்க வேண்டும்.
4. 1 மீட்டர் கூடல் இடைவெளி
5. கட்டாயம் முகக்கவரி அணிந்திருக்க வேண்டும்.
6. 16/1/2022 முதல் 19/1/2022 வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி.
7. 16, 17, 19 / 1 / 2022 ஆகிய நாட்களில் காலை 5.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் 12 முறை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி.
8. தைப்பூசம் நாள் 18/1/2022 தேதியில் காலை 5.00 மணி முதல் 18 முறை முறை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி.
9. ஒவ்வொரு தரிசனமும் 30 நிமிடங்கள் மட்டுமே. அடுத்த 30 நிமிடங்கள் கிருமிநாசிணி தெளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
10. முடி காணிக்கைக்கு உள்நாட்டு வணிகம், பயனீட்டாளர் விவகார அமைச்சின் முடி வெட்டும் பொது விதிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும்.
11. ஆற்றங்கரை குளியலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
12. கோயில் வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருக்கும் நிரந்தரக் கடைகளுக்கு மட்டுமே அனுமதி. கோயில்களுக்கு உள்ளேயும் வெளியேயும் தற்காலிகக் கடைகளுக்கு அனுமதி இல்லை.
13. தேர் ஊர்வலத்தின் போதும் கோயில் வளாகத்தின் உள்ளேயும் வெளியேயும் அன்னதானம், தண்ணீர் பந்தல்களுக்கு அனுமதி இல்லை.
தேர் ஊர்வலம் தொடர்பான பொது விதிமுறைகள்
1. தேர் ஊர்வலத்தில் கலந்து கொள்ள கோயில் நிர்வாகத்தினர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
2. அவர்கள் முன்னதாகவே கோயில் நிர்வாகத்தினரிடம் பதிவு செய்திருக்க வேண்டும்.
3. தேர் ஊர்வலத்திற்குக் காவல்துறை அனுமதியையும் பெற்றிருக்க வேண்டும்.
4. தேர் ஊர்வலம் நிறுத்தப்படும் இடங்களில் கோயில் நிர்வாகத்தின் (முடிவு செய்யப்பட்ட ஒரே நிறத்தில்) கூடாரம் அமைக்கப்படும். (20 x 20 அடி பரப்பளவு). இதரக் கூடாரங்களுக்கு அனுமதி இல்லை.
5. அங்கு இறைவன் தரிசனத்திற்கும் அர்ச்சனைக்கும் வருகிறவர்கள் மைசெஜாத்தெராவில் பதிவு செய்ய வேண்டும்.
6. 1 மீட்டர் கூடல் இடைவெளி
7. கட்டாயம் முகக்கவரி அணிந்திருக்க வேண்டும்.
8. காவல்துறை, ஒருமைப்பாட்டு அமைச்சு, ஊராட்சி மன்றங்கள் இவை அனைத்தையும் கண்காணிக்கும்.
பால் குடம் தொடர்பான பொது விதிமுறை
1. 14/1/2022 முதல் 19/1/2022 வரை பால் குடம் ஏந்தி வந்து நேர்த்திக் கடன் செலுத்தலாம்.
2. ஒவ்வொரு 30 நிமிடங்களுக்குப் பிறகு. அடுத்த 30 நிமிடங்கள் கிருமிநாசிணி தெளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
3. பால் குடம் செலுத்துபவர்களுக்கென தனி வழிப்பாதையை 1 மீட்டர் கூடல் இடைவெளியுடன் கோயில் நிர்வாகம் அமைக்க வேண்டும்.
4. முன்னதாகவே, கோயில் நிர்வாகத்தினருடன் பதிவு செய்திருக்க வேண்டும்.
2022 தைப்பூசம் : கோயில்கள் வகைகளும் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையும்


