கோலாலம்பூர் | 13/1/2022 :-
எதிர்வரும் வசந்த காலப் பருவத்தின்போது கோவிட்-19 பெருந்தொற்றுடன் இதர சுவாச சம்பந்தபான நோய் எற்படக் கூடிய ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து செய்தி வெளியிட்ட Xinhua செய்தி நிறுவனம், மக்கள் ஒன்று கூடுவதாலும் வசந்த காலத்தின்போது இன்ஃபுலுவென்ஸா போன்ற நோயின் பரவல் அதிகம் இருப்பதாலும் இந்த அபாய எச்சரிக்கையை உலக சுகாதார அமைப்பின் அவசர சுகாதாரத் திட்டத்தின் பிரதிநிதி Dr Maria van Kerkhove விடுத்திருப்பதாகக் கூறியது.
கடந்த வாரத்தில் மட்டும் உலகம் முழுவதும் 15 மில்லியனுக்கும் மேலான புதிய கோவிட்-19 நேர்வுகள் பதிவு செய்யப்பட்டது எனவும் வார நிலையில் பதிவு செய்யப்பட்ட நேர்வுகளில் அதுவே மிக அதிகம் எனவும் அவர் சொன்னார்.
பெரும்பான்மை உலக நாடுகளில் டெல்தாவைக் காட்டிலும் ஓமைக்ரோன் தொற்று மிகவும் தீவிரமாகப் பரவியதற்கு முதன்மைக் காரணம் என உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் Tedros Adhanom Ghebreyesus குறிப்பிட்டார்.
இறப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் கடந்த ஆண்டு அக்தோபர் மாதம் தொட்டே சராசரியாக 48,000 எனப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
அதே சமயம் இத்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கடந்த அலையைப் போன்றே தொடர்ந்து ஒரே நிலையில் உள்ளது.
டெல்தா வகை கோவிட்-19 தொற்றை விட ஓமைக்ரோன் வகை மிகவும் சொற்ப அறிகுறிகளைக் காண்பிக்கிறது. இருந்தாலும் அது மிகவும் ஆபத்தானத் தொற்று. அதிலும் குறிப்பாக தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கும் இயிரிழப்பு வரை கொண்டு வரும் அபாயம் உள்ளது என அவர் மேலும் சொன்னார்.


