சனிக்கிழமை, மே 30, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > செலவு செய்யாமல் ஜொகூர் கால்பந்து அணிக்கு பெருமை சேர்த்துள்ளேன்!
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

செலவு செய்யாமல் ஜொகூர் கால்பந்து அணிக்கு பெருமை சேர்த்துள்ளேன்!

பெட்டாலிங் ஜெயா, செப். 22-
அண்மையில் இங்கிலாந்து ஸ்டாண்போர்ட் பிரிட்ஜ் அரங்கில் செல்சீ-நோட்டிங்ஹேம் போரஸ்ட்டுக்கும் இடையிலான கால்பந்தாட்டத்தின் போது, உள்ளரங்கு எ.ஈ.டி. தொலைக்காட்சியில் ஜோகூர் கால்பந்து அணியைப் பாராட்டி வெளியிடப்பட்ட விளம்பரச் செய்தியிக்கு பணம் ஏதும் செலுத்தப்படவில்லை என ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார்.

மலேசிய சூப்பர் லீக் போட்டியில் ஜோகூர் குழு 4 தொடர் வெற்றிகளை அடைந்ததால், அந்தப் பாராட்டு விளம்பரம் வெளியிடப்படதாகவும், அது நட்பின் அடிப்படையில்தான் என்றும், பணம் செலுத்தி வெளியிடப்பட்டது அல்ல என அவர் குறிப்பிட்டார். அந்த பாராட்டு விளம்பரத்திற்காக தாம் ஒரு வெள்ளியைக் கூட செலுத்தியது கிடையாது. தாம் அந்த விளையாட்டுக் குழுவோடும் அதன் நிர்வாகிகளுடனும் நல்ல நட்புறவைத் சம்பாதித்துள்ளதால், அது சாத்தியமானது என துங்கு இஸ்மாயில்(டிஎம்ஜே) குறிப்பிட்டார்.

தாம் மலேசிய பந்துவிளையாட்டு சம்மேளனத்தின் (எஃப்ஏஎம்) தலைவராகப் பதவியேற்றபோது, கேரி ஸ்டீவன் ரோபட் என்பவர் அந்த சம்மேளனத்தினால் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும், பொருஸ்ஸியா டோட்மண்டின் கால்பந்து அணியிடம் தமக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, எந்தக் கட்டணமும் இல்லாது அவரை பயிற்சிக்காக அங்கு அனுப்பியதாக டிஎம்ஜே குறிப்பிட்டார். அந்த அணியின் செயல்முறை அதிகாரியான எட்வின் போய்க்காம்ப் தமது நண்பர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தாய்லாந்துக்கு தமது விளையாட்டாளர்களை நட்பு முறையிலான விளையாட்டில் கலந்து கொள்ள புரிராம் யுனைடெட் உரிமையாளரான நெவின் சிட்சோப்பின் உதவியோடு அங்கு அழைத்துச் சென்றதாகவும், எல்லா செலவுகளையும் அவரே ஏற்றுக் கொண்டதாகவும் டிஎம்ஜே குறிப்பிட்டார். கால்பந்து விளையாட்டில் இருந்த ஆர்வ மிகுதியால், பலவேறு நாடுகளின் குழுக்களோடு தாம் நல்ல நட்புறவைக் கொண்டிருப்பதால், செலவில்லாமல் பல காரியங்களை ஆற்ற முடிவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன் காரணமாகப் பல முதலீட்டாளர்கள் ஜோகூரில் முதலீடு செய்ய விரும்புவதாகவும், மேலும் இந்த வாய்ப்புகளை வைத்துக் கொண்டு தாம் ஜோகூர் மாநிலத்தை மேம்படுத்த எண்ணம் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன