Homeஆன்மீகம்இயேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூரும் புனித வெள்ளி !

இயேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூரும் புனித வெள்ளி !

கோலாலம்பூர் | 15/4/2022 :-

உலகம் முழுவதும் இன்று புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.

புனித வெள்ளி, அடிப்படையில் ஒரு துக்க நாள். கல்வாரி மலையில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள். இயேசு கிறிஸ்து உலக மக்களின் பாவத்தினை ஏற்று தன்னையே சிலுவை மரத்தில் பலியாக தந்ததால், ‘இயேசு கிறிஸ்து உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி’ என பைபிளில் கூறப்பட்டுள்ளது.

இயேசுவின் துன்பங்களை நினைவு கூரும் நாளாக புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த தினத்தையும், அவர் அடைந்த துன்பங்களையும் நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படும் நாள் தான் புனித வெள்ளி.

City churches gear up for Good Friday, Easter | Deccan Herald

இந்த புனித வெள்ளியானது இயேசு மீண்டும் உயிர்பெற்றெழுந்த தினமான ஈஸ்டர் ஞாயிறுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இன்று உலகம் முழுவதும் புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது.

காலை முதல் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. பல ஆலயங்களில் மதிய நேரத்தில் சிலுவை பாதை நிகழ்ச்சி நடத்தப்படும்.

இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து கொலை செய்வதற்காக அவரை அடித்து, துன்புறுத்தி அழைத்து செல்வதை நினைவு கூறும் வகையில் இந்த சிலுவை பாதை நடத்தப்படுகிறது. புனித வெள்ளியன்று தேவாலயங்களில், இயேசு சொன்ன 7 கடைசி வார்த்தைகள் நினைவு கூறப்படும்.

கத்தோலிக்க தேவாலயங்களில் இயேசு இல்லாததன் அடையாளமாக, சிலுவையில் அறையப்பட்ட உருவங்கள் ஊதா நிற துணியால் மூடப்பட்டுள்ளன. இயேசுவின் மரணம் என்று அழைக்கப்படும் நினைவுகூரலின் நிதானமான தன்மையைக் கொடுப்பதும், கிறிஸ்துவின் பேரார்வம், மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றின் மர்மத்தை பிரதிபலிப்பதும் புனித வெள்ளியின் நோக்கமாகும்.

Catholic churches step up safety measures on Maundy Thursday, no washing of  feet as precaution | The Straits Times

புனித வெள்ளியன்று கிறிஸ்தவர்கள் முழு விரதம் கடைபிடிப்பார்கள். முன்னதாக மாலை ஆலயங்களில் பெரிய வியாழன் நிகழ்வு கடைபிடிக்கப்பட்டது. பணிவிடைப் பெற அன்று, பணிவிடைப் புரியவே வந்தேன் என்று வார்த்தையில் மட்டுமல்ல தன் சீடர்களின் பாதங்களை கழுவி அவ்வார்த்தைகளுக்கு உருவம் கொடுத்தார் இயேசு கிறிஸ்து.

அதை நினைவு கொள்ளும் நாள்தான் பெரிய வியாழன். மறுநாளான இன்று அனைத்து தேவாலயங்களிலும் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகிறது.

spot_img

latest articles

explore more