கோலாலம்பூர் | 15/4/2022
இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நிழுவைக்கு வந்த விடுதலைப்புலிகள் வழக்கை, ஏற்கனவே வழங்கிய உயர் நீதிமன்ற தீர்ப்பையே நிலைநிறுத்தும் வகையில் மேல்முறையீட்டு நீதிமன்றமும் தள்ளுபடி செய்வதாக மூன்று நீதிபதிகள் குழு தீர்ப்பு வழங்கினர்
மனுதாரர் வீ. பாலமுருகன் சார்பின் வழக்கறிஞர்களான திரு அருள் மேத்யூசு, திரு ஓமார் குட்டி, திரு முகமது பர்அன், திருமதி கலைநிலா, திரு லிம் வெய் செய்ட் ஆகியோருடன் முன்னாள் சட்டத்துறை தலைவர் டத்தோ அம்பிகா அவர்களும் இக்குழுவுக்கு தலைமையேற்று வாதாடினர்
இத்தடைச் சட்டம் வழக்குதாரர் உட்பட பொது நலத்தையும் பொது மக்களையும் பாதிக்கிறது. தமிழர் இனத்தின் தார்மீக உணர்வை சிதைக்கிறது. உயிர்ப்பில்லாத அதுவும் பல ஆண்டுக்கு பின்னரான பொது அறிவிப்பு இல்லாத தடை நியாயமற்றது. மேலும் பட்டியலிட்ட அமல் முறை முறையற்றது என பலதரப்பட்ட தரவுகளுடன் பல மணி நேர கடுமையான மற்றும் அழுத்தமான வாதங்களுகிடையே நடந்தேறியது
இருப்பினும் ஏற்கனவே உயர் நீதிமன்றத் தீர்ப்பையே மீண்டும் மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியது வருத்தமளித்தாலும் மேற்கண்ட நடவடிக்கையை தனது குழுவினர் மற்றும் வழக்கறிஞர் குழுவினர் ஆலோசனைக்கு பிறகு அறிவிப்பதாக திரு வீ.பாலமுருகன் கூறினார்
தொடர்ந்து இவ்வழக்குக்கு கடுமையாக உழைத்த வழக்கறிஞர்கள் குழுவுக்கும், நீதி வழங்கிய நீதிபதிகளுக்கும், தமக்கு எல்லா விதத்திலும் துணை நின்ற செயலக குழுவினருக்கும், நண்பர்களுக்கும், தமிழர் தேசிய இயக்கங்களுக்கும், மற்றும் இவ்வழக்கை வெளியுலகத்திற்கு கொண்டு வந்த தமிழ் நாளிதழ்கள் உட்பட அனைத்து ஊடகங்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்வதாக பாலமுருகன் வீராசாமி கூறினார்