Homeஅரசியல்கோலாலம்பூர் - சிலாங்கூர் இந்திய வர்த்தக சபை தேர்தல்: தலைவர் பதவிக்கு நிவாஸ் ராகவன் –...

கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தக சபை தேர்தல்: தலைவர் பதவிக்கு நிவாஸ் ராகவன் – தமிழ்ச்செல்வன் போட்டி

கோலாலம்பூர், ஏப்.15-

     நாட்டின் பிரசித்தி பெற்ற வர்த்தக சபையான கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சபையின் அடுத்த தவணைக்கான தலைவர் பதவிக்கு நிவாஸ் ராகவன் , தமிழ்ச்செல்வன் இருவர் இடையே போட்டி நிலவுகிறது.

     இச்சபையின் நடப்புத் தலைவர் டத்தோ ராமநாதன்  தனது பதவியைத் தற்காத்துக் கொள்ளாததையடுத்து தலைவர் பதவிக்கு நிவாஸ் ராகவனும் தமிழ்ச்செல்வனும் போட்டியிடுகின்றனர்.

     இதன் புதிய நிர்வாகக் குழுவிற்கான வேட்பு மனு தாக்கல் தலைநகரில் அமைந்துள்ள கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சபையின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

     அனைத்து பதவிகளுக்குமான வேட்பு மனு தாக்கல் நிகழ்வை வழக்கறிஞர் பசுபதி செவ்வனே  வழிநடத்தினார்.

     துணைத் தலைவர் பதவிக்கு குமரகுருவை எதிர்த்து வி.கே.கே.ராஜசேகரன் போட்டியிடுகிறார்.

     தொடர்ந்து உதவி தலைவர் பதவிக்கு கமால் குமாரும் டாக்டர் மரியா ரூஃபினாவும் களம் இறங்கும் வேளையில் பொருளாளர் பதவிக்கு குமரேசனும் டத்தின் மகேஸ்வரியும் போட்டியிடுகின்றனர்.

     செயலவை உறுப்பினர் பொறுப்புக்கு டாக்டர் நெடுஞ்செழியன், டத்தோ சந்திரசேகரன், இளங்கோவன், குமரன் முனியாண்டி, எம்.சுப்ரமணியம், மோகனா, டாக்டர் நவமணி ராமச்சந்திரன், வி.பிரபாகரன், ராம்குமார், ஜனணி, பிரபாகரன் ராஜா , ராஜேஸ்குமார், சத்திய வர்மன், பன்னீர் செல்வம், டத்தோ  மூர்த்தி, என்.பி. ராமன், அஸ்வின், பாஸ்கரன் ஆகியோர் போட்டியிடவிருக்கின்றனர்.

     இவர்களோடு ஜகராவ், டோனி கிளிஃபர்ட், ரவீன் சந்திரன், அமுதா, சித்ரா தேவி, சேகரன், சரவணக்குமார், ஃபவ்சியா பிபி, பத்மநாதன், செல்வராஜ் ஆகியோரும் செயலவை உறுப்பினர் பொறுப்புக்குப் போட்டியிடுகின்றனர்.

     தேர்தலுடன் கூடிய கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சபையின் 93 ஆவது பேராளர் மாநாடு இம்மாதம் 24ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா, சிவிக் செண்டரில் நடைபெறவிருக்கிறது.

     இத்தேர்தலில் நிவாஸ் ராகவன் அணியினருக்கும்  தமிழ்ச்செல்வன்  அணியினருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

spot_img

latest articles

explore more