கோலாலம்பூர் | 20/4/2022 :-
வங்காளதேசத்தில் A Group 2022 நடத்திய Bangamata International Professional Squash Championship போட்டியில் மலேசியாவைச் சேர்ந்த வி சகோதரிகள் என்றறியப்படும் வினிகாஷினி குலசேகரன். வித்ரிகாஷினி குலசேகரன் எனும் இரட்டையர்கள் முதல் இடத்தையும் மூன்றாவது இடத்தையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.
இஃது இவர்களின் முதல் அனைத்துலக நிலையிலானப் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

தொடக்கத்தில் இளையோர் களத்தில் பங்கெடுத்து வந்த வி சகோதரிகள் தற்போது தனிநபர் களத்திற்குள் நுழைந்துள்ளனர்.
மலேசியாவின் பேரா மாநிலத்தின் தைப்பிங் நகரைச் சொந்த ஊராகக் கொண்ட இவர்கள் நவம்பர் 17 ஆம் நாள், 2005 இல் பிறந்தனர். தங்களின் 11 வயதில் ஸ்குவாஷ் விளையாட்டில் இவர்கள் ஈடுபடத் தொடங்கினார்.

மலேசிய நிலையிலும் அனைத்துலக நிலையிலும் இளையோர் களத்தில் முழு வீச்சில் தங்கள் திறமையை வெளிப்படுத்தினார். வெற்றியும் கண்டு வந்தனர். மிகக் குறிப்பாக 2019 ஆம் ஆண்டு சீனாவில் நடந்த டலியான் அனைத்துலக ஜூனியர் போட்டியில் முதல் இரு இடங்களையும் 2018 ஆம் ஆண்டு ஆசிய நிலையில் முதல் 8 இடங்களில் தங்களை நிலைப்படுத்திக் கொண்டனர். அவர்கள் வெற்றி கொண்டனர்.
2021 ஆம் ஆண்டு அலெரிக்காவில் நடந்த அனைத்துலக இளையோர் போட்டியில் இவர்கள் மூன்றாவது சுற்றூ வரை முன்னேறினார்.

மலேசிய நிலையில் நடக்கவிருக்கும் மலேசிய விளையாட்டுப் போட்டியாக சுக்மாவில் மிகவும் இளமையானப் போட்டியாளர்கள் எனவும் இவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.
ஸ்குவாஷ் விளையாட்டைத் தவிர்த்து இவர்கள் வயலின் இசைக் கருவியை இசைப்பதிலும் பரதநாட்டியத்திலும் தங்களின் பன்முகத் திறமையை வளர்த்து பீடு நடை போடுகிறார்கள்

