Homeமலேசியாமலேசியத் தமிழ்ப் பேச்சாளர் மன்றத்தின் 10 ஆண்டுகள் நிறைவு விழா

மலேசியத் தமிழ்ப் பேச்சாளர் மன்றத்தின் 10 ஆண்டுகள் நிறைவு விழா

கோலாலம்பூர் | 20/4/2022 : –

2012 ஆம் ஆண்டு மலேசியத் தமிழ்ப் பேச்சாளர்களால் தோற்றுவிக்கப்பட்ட மலேசியத் தமிழ்ப்பேச்சாளர் மன்றம் 10 ஆண்டுகள் கடந்து மலேசிய மண்ணில் பயணிப்பதை மலேசியத் தமிழ்ப்பேச்சாளர்கள் நன்கு உணர்வர். 2012 முதல் 2022 வரையில் பேச்சுக்கலை தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளும் போட்டிகளும் , பல்கலைக்கழக மாணார்களின் போட்டிகளுக்கு வழிகாட்டியாகவும் மலேசியத் தமிழ்ப்   பேச்சாளர் மன்றம் செயலாற்றி வருகிறது.

இத்தகு மலேசியாவிலேயே பேச்சுக்கலைக்காகச் செயற்படும் மன்றமாக மலேசியத் தமிழ்ப் பேச்சாளர் மன்றம் திகழ்கிறது. 2 ஆண்டுகள் கோறனி நச்சில் பொது முடக்கத்தால் இயங்கலையில் செயலாற்றிய வேளையில் , தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதை மலேசியத் தமிழ்ப் பேச்சாளர் மன்றத்தின் 10 ஆண்டுகள் நிறைவு விழா நிரூபிக்கிறது. மேலும் மலேசியத் தமிழ்ப்பேச்சாளர்கள் ஒருங்கிணையவும் , பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள்  ஏற்பாடு செய்த பேச்சுக்கலை தொடர்பான போட்டிகளுக்கு அம்மாணவர் அமைப்புகளுக்குச் சிறப்பு அங்கீரமும் வழங்கப்படவுள்ளது.  இந்த 10 ஆண்டுகள் நிறைவு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியின் விவரம்

நாள் | DATE : 30.04.2022 [காரிக்கிழமை]

நேரம் | TIME : 1.00pm-6.00pm

இடம் | VENUE : DEWAN KOMUNITI , PULAU MERANTI,PUCHONG SELANGOR

இந்நிகழ்ச்சியில் இளம் தமிழ்ப்பேச்சாளர்களின் சிறப்புப் பட்டிமன்றமும் , சொற்போர்க் கையேடும் அதிகாரப்பூரவமாக வெளியிடப்படும். மலேசியத் தமிழ்ப்பேச்சாளர்கள் , இளைஞர்கள் , பல்கலைக்கழக மாணவர்கள் , மாணவர் அமைப்புகள் , சொற்போர் நடுவர்கள் , பொதுமக்கள் என அனைவரையும் இந்நிகழ்ச்சிக்கு அழைக்கிறோம்.

தங்களின் வருகையை 0122443010 | 0129245484 | 01116506258 எனும் எண்ணுக்கு அழைத்து உறுதி செய்யலாம்.

திரள்வோம்..

ஒருங்கிணைவோம்..

உயர்வோம்..

நன்றி
தினகரன் சங்கரன்
செயலாளர்
மலேசியத் தமிழ்ப் பேச்சாளர் மன்றம்

spot_img

latest articles

explore more