கோலாலம்பூர், செப். 23-
தேசிய அளவிலும் மாநில அளவிலும் உள்ளதை போல கிளைகள் அளவிலும் அதன் அதிகாரத்தை அதிகரிக்கவே ம.இ.காவின் சட்டவிதிகளில் திருத்தம் செய்யப்படுவதாக ம.இ.காவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார்.

தற்போது கிளைகளின் செயல்பாடுகள் மிக குறைவாகவே இருக்கின்றது. இந்த சட்டத்திருத்தத்தை கொண்டு வருவதன் வாயிலாக கிளைகளின் அதிகாரம் அதிகரிப்பதோடு அவையனைத்தும் தங்களின் நடவடிக்கைகளை மேம்படுத்தி இந்திய சமுதாயத்தை மேம்படுத்தக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என இன்று புத்ரா உலக வாணிப மையத்தில் தொடங்கிய ம.இ.காவின் 71ஆம் ஆண்டு பேராளர் மாநாட்டில் உரையாற்றிய அவர் கூறினார்.

இந்த புதிய சட்டத்திருத்ததின் மூலமாக கிளைகள் பலம் பெறுவதோடு நாடு தழுவிய நிலையில் கட்சியின் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகள் சிறப்பாக இயங்குவதை நாம் பார்க்க முடியும். அதோடு, கட்சியின் அதிகமான உறுப்பினர்கள் தலைவர்களை தேர்தெடுக்க முடியும். தேர்தல் காலங்களில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளை குறைக்கவும் முடியும்.  எதிர்கட்சிகளை பொருத்தவரையில் ம.இ.கா. இந்திய சமுதாயத்திற்கு என்ன செய்தது என்ற கேள்வியை எழுப்பத்தான் தெரியும். ஆனால், அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை ஒரு போதும் அறிவிக்க மாட்டார்கள்.

இந்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்காக பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கடந்த ஏப்ரல் மாதம் இந்திய மேம்பாட்டு திட்டவரைவை அறிவித்தார். இதன் அடிப்படையில் நாடு தழுவிய நிலையில் மெகா டாப்தார் திட்டத்தை அமல்படுத்தினோம். இதற்கு முன்பு நாங்கள் மேற்கொண்ட இத்திட்டத்தின் வாயிலாக 4000 பேருக்கு குடியுரிமையை பெற்று தந்துள்ளோம். நாடு தழுவிய நிலையில் எஸ்.ஐ.டி.எப். சேவை மையத்தையும் திறந்து வைத்திருக்கிறோம்.

துணைக்கல்வியமைச்சர் டத்தோ கமலநாதன் முயற்சியில் ஏராளமான தமிழ்ப்பள்ளிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து நிதியுதவி பெற்றுத்தரப்பட்டு புதிய கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது குறித்து அவர் நூல் ஒன்றையும் தயாரித்துள்ளார். வசதி குறைந்த மாணவர்களை நல்ல வழிக்கு கொண்டு செல்லவும் அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கவும் சிறப்பு மையத்தையும் அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். இவற்றையெல்லாம் ம.இ.கா. உறுப்பினர்கள் இந்திய சமுதாயத்திடம் எடுத்துக்கூறி அவர்களை தேசிய முன்னணியின் பக்கம் கொண்டுவர வேண்டுமென டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் குறிப்பிட்டார்.

1 COMMENT

  1. Kacciyo nalla kacci mic.Irukkum talaivarkal nalla talaivaraga iruntale. Nallatu. Eppadiye iruntaan muudu villa taan kaanum.oru sila talaivarkal seiyum tavaru.anaitu talaivarukkum paatippu. Kaaranam kuala lipis il.oru sila talaivarkal patavi veri pidittu aadukiraarkal.

Comments are closed.