எதிர்க்கட்சியை விட கட்சியின் உட்பூசல்களே ம.இ.காவிற்கு தோல்வியை ஏற்படுத்தும்! டாக்டர் சுப்ரா

0
5

கோலாலம்பூர், செப். 23-
எதிர்கட்சிகளால் ம.இ.காவிற்கு தோல்வி ஏற்பட்டுவிடுமோ என்பதைவிட கட்சியினுள்ள உட்பூசல்களால் தோல்வி ஏற்பட்டு விடுமோ என்று கருத வேண்டியிருப்பதாக அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தெரிவித்தார்.

குறிப்பிட்ட தொகுதிகளில் இந்திய சமூகத்திற்கான சேவைகளை செய்வதற்கு மட்டுமே ஒருங்கிணைப்பாளர்களை நியமித்துள்ளோம். இன்னும் சில தொகுதிகளில் ஒரு சிலர் தங்களை சொந்தமாகவே வேட்பாளர்களாக கருதிக்கொண்டு அங்கு வேலை செய்து வருகின்றனர். அத்தொகுதியில் கட்சியின் இதர தலைவர்கள் அல்லது பிரிவுகள் சென்றால் அவர்களை வேலை செய்யவிடாமல் குறிப்பிட்ட தரப்பினர் தடுக்கின்றனர்.

ஆக இதைப்போலான நடவடிக்கைகளால் பாதிப்பு நம் கட்சிக்கே ஏற்படும். யாரை எந்தெந்த அடிப்படையில் வேட்பாளர்களாக நிறுத்துவது தொடர்பில் தெளிவான ஆய்வை நடத்தி வருகிறோம். அவ்வகையில், கட்சியிலுள்ள அனைவரும் பொதுத்தேர்தலில் ம.இ.காவும் தேசிய முன்னணியும் வெற்றி பெறுவதற்கு இணைந்து உழைக்க வேண்டுமென டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கேட்டுக்கொண்டார்.