Homeசமூகம்கலாச்சாரமும் சமயமும் இரண்டு கண்களாக விளங்க வேண்டும்! டாக்டர் சத்தியபிரகாஷ்

கலாச்சாரமும் சமயமும் இரண்டு கண்களாக விளங்க வேண்டும்! டாக்டர் சத்தியபிரகாஷ்

உலுசிலாங்கூர், மே 5-

சமயம் ஒரு சமூகத்தை நேர்வழி படுத்துகிறது கலாச்சாரம் அவனது தளத்தையும் தடத்தையும் அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும்அம்சமாக விளங்குகிறது என்று எஸ்பிகேர் மருத்துவ குழுமத்தின் தோற்றனர் டாக்டர் சத்யபிரகாஷ் நடராஜன் தெரிவித்தார்.

உலு சிலாங்கூர் மாவட்டத்தில் உலு பெர்ணம் சட்டமன்ற தொகுதியில் பிரசித்தி பெற்ற ஆலயமான பெல்டா கெடாங்ஸா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சித்திரை இன்னிசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் அவ்வாறு கூறினார்.

இவ்வாலயத்தில்திருவிழாவிற்கு முதல் நாள் நடைபெற்ற மாவிளக்கு பூஜையை தொடர்ந்து இந்த இன்னிசை இரவு சிறப்பாக நடைபெற்றது. பூஜையில் கலந்து கொண்ட பிறகு இன்னிசை நிகழ்ச்சி அதிகாரபூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது டாக்டர் சத்யபிரகாஷ் அவர் கூறினார்.

பெல்டா கெடாங்சா குடியிருப்பு பகுதியும் இங்கு வாழும் மக்களும் இதுவரை மன்மனம் மாறாமல் தங்களுடைய கலாச்சாரத்தையும் சமயத்தையும் பின்பற்றுவது மகிழ்ச்சிக்குரிய ஒரு அம்சமாகவே இருக்கிறது.

இது இப்படியே தொடர வேண்டும் அதோடு மட்டுமின்றி இங்குள்ள மக்கள் தங்களின் வருங்கால சந்ததிகளின் கல்விக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த சிறப்பானதொரு திருவிழாவையும் அதைத்தொடர்ந்து இன்னிசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்திருந்த ஆலய தலைவர் செல்வன் ரங்கசாமி, செயலாளர் கலைச்செல்வன் ஜெகநாதன், பெல்டா கெடாங்ஸா இந்திய மேம்பாட்டு கழகத்திற்கும் தமிழ் என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

ஆலயத்தின் மா விளக்கு பூஜையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர் தற்போது அந்த குடியிருப்பில் வாழ்பவர்களும் அங்கிருந்து வெளி வட்டாரங்களில் குடிபெயர்ந்தவர்கள் ஒன்று கூடும் ஒரு மிகச் சிறந்த நிகழ்ச்சியாக இந்த திருவிழா அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

latest articles

explore more