Homeஅரசியல்15ஆவது பொதுத் தேர்தலை தற்போது நடத்தவேண்டிய அவசியமில்லை! - பாஸ்

15ஆவது பொதுத் தேர்தலை தற்போது நடத்தவேண்டிய அவசியமில்லை! – பாஸ்

சில கட்சிகள் கோரியபடி 15வது பொதுத் தேர்தல் (GE15) அவசர அவசரமாக நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறினார்.

தற்போதைய சூழ்நிலையில் குறிப்பிட்ட கால அவகாசம் முடியும்வரை தேசியக் கூட்டணிக்கு பாஸ் உட்பட இதர கட்சிகள் வழங்கிய ஆதரவு தொடர்வதுதான் சிறப்பாக இருக்குமென்றும் பாஸ் கட்சி நம்புகிறது.

“GE15 ஒத்திவைக்கப்பட்டு, பதவிக்காலம் முடியும் வரை ஆட்சி தொடர்வதை நாங்கள் ஏற்கிறோம்.

“அரசாங்கம் தனது கடமைகளை போதிய காலத்திற்குள் நிறைவேற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதே சிறந்தது. என ஹாடி அவாங் கூறினார்.

2021 ஆம் ஆண்டு அம்னோ பொது பேரவையில் 15ஆவது பொதுத் தேர்தலை5 விரைவுபடுத்தப்படுவதற்கும் பொதுத் தேர்தலுக்குப் பிறகு கட்சித் தேர்தலை நடத்துவதற்குமான 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதனிடையே தேசியப் பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், பாஸ் நிர்வாகிக்கும் கெடா, திரெங்கானு, கிளந்தான் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றம் கலைக்கப்படாது என்பதையும் அவர் நினைவுறுத்தியுள்ளார்.

spot_img

latest articles

explore more