கோலாலம்பூர், மே 9-
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் புதிய தலைவராக ஞானசைமன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே அச்சங்கத்தின் துணைத் தலைவராக விஜயராணி செல்லப்பா, உதவித் தலைவர்களாக தமிழ்ச்செல்வம் காத்தமுத்து, சாந்தா காளியப்பன், செயலாளராக மோகனன் பெருமாள், துணைச் செயலாளராக மலர்விழி தி.ப செழியன், பொருளாளராக முனியாண்டி மருதன், துணைப் பொருளாராக புஸ்பாதேவி ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
செயலவை உறுப்பினர்களாக சபா கணேஷ், ரூபா தேவி சுப்பையா, நிர்மலாதேவி பன்னீர்செல்வம், சுப. கதிரவன், ஆஷா குமாரன், ந.கு. முல்லைச் செல்வன், கடாரச் சோழன், சீரியநாதன், சத்தியசீலன், ராஜமோகன் ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.


