புஸ்பா நாராயண், தொகுப்பாளர்
மரக்கறி மெஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய உங்களின் அனுபவம் எப்படி இருந்தது?
18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தொகுப்பாளராக என் பயணத்தைத் தொடர்கிறேன். இந்த முறை ஒரு சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறேன். தோட்டத்திலிருந்துக் காய்கறிகளைப் பறித்து ஆரோக்கியமான உணவுகளைச் சமைக்க இந்நிகழ்ச்சி அனுமதித்தது. சிறுவயதில் நாங்கள் சுயமாகக் காய்கறிகளைப் பயிரிடும் நினைவலைகளை நினைவுக்கூற இது எனக்கு வாய்ப்பளித்தது. பலவிதமானச் சமையல் குறிப்புகளை நான் கற்றுக்கொண்டது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது.
நிகழ்ச்சியின் பிறப்பகுதிகளை நீங்கள் இரசித்தீர்களா?
சமையலின் சுவையை வெளிப்படுத்துவதால் நாங்கள் சமைத்தப்பின் உணவுகளை ருசித்தலை எப்போதும் எதிர்ப்பார்ப்போம். உணவைப் பற்றிய நேர்மையானக் கருத்துக்களை விருந்தினர்கள் பகிர்ந்துக் கொண்டனர். இது சமையல்காரரை உற்சாகப்படுத்தியது.
நிகழ்ச்சியில் சமைக்கப்பட்ட உணவுகளை ஏதேனும் வீட்டில் சமைக்க முயற்சித்தீர்களா?
ரோஸ்மேரி ரசம், வெண்டைக்காய் குலம்பு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய எனக்குப் பிடித்தச் சில சமையல் வகைகளைச் சமைக்க இன்னும் எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. இருப்பினும், விரைவில் அவற்றைச் சமைக்க ஆவலுடன் உள்ளேன்.
ராஜேஷ் கண்ணா, சமையல்காரர்
சமையல்காரராக உங்களின் பின்னணி மற்றும் சமையல் துறையில் உங்களின் பயணத்தைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்?
1992-இல் கோலாலம்பூரில் உள்ளப் பான் பசிபிக் ஹோட்டலில் நான் சமையல்காரராகப் பயிற்சிப் பெற்றேன். 1995-ல், சிங்கப்பூரில் ஒரு சிறந்த உணவகத்தில் பணியைத் தொடர்ந்தேன். சுமார் மூன்று வருடங்களாக அங்கு வேலைச் செய்தேன். நான் கோலாலம்பூருக்குத் திரும்பியதும் ஆக்கப்பூர்வமான சமையல்களை ஆராய்ந்தேன்.

அவை நாளிதழ்கள், சஞ்சிகைகள் மற்றும் தொலைக்காட்சியில் இடம்பெற்றன. ஜோர்டனில் உள்ள அம்மானில் ஒரு சிறந்த உணவகத்தைத் திறக்க ஒரு நிறுவனத்திற்கு உதவினேன். சமையல்காரராக 30 வருட பரந்த அனுபவத்துடன், அரச உறுப்பினர்கள், பிரபலங்கள், அரசாங்கப் பணியாளர்கள் மற்றும் பல தரப்பு மக்களுக்குச் சமைத்து உணவளித்துள்ளேன். சமைப்பதில் எனக்கு எப்போதும் ஆர்வமுண்டு. மேலும், தொலைக்காட்சியில் பிரபலச் சமையல்காரராக இடம்பெற்றது எனது வாழ்நாள் கனவு நனவானத் தருணமாகும்.
நிகழ்ச்சியில் உங்களுக்குப் பிடித்தச் சில உணவுகள் யாவை?
அனைத்து வகையான இனிப்புகளும் எனக்கு மிகவும் விருப்பானவை என்றுதான் கூறுவேன். பாலில் இருந்துத் தயாரிக்கப்படும் இந்திய இனிப்புகளின் அழகை இந்த நிகழ்ச்சி எனக்கு கற்றுக் கொடுத்துள்ளது. மிருதுவானச் சபுதானா வடை, பருப்புச் சுரைக்காய் குட்டுப், பன்னீர் பொன்னாங்கனிக் கிரேவி, கங்குங் சிலி மேலும் எனக்கு மிகவும் விருப்பானச் சமையல்களாகும்
மரக்கறி மெஸ் நிகழ்ச்சியில் இரசிகர்கள் எவற்றை எதிர்ப்பார்க்கலாம்?
தோட்டத்தில் பறித்தக் காய்கறிகளைக் கொண்டு ஆரோக்கியமான மற்றும் சத்துக்கள் நிரம்பியப் புதுமையானச், சுவையான மற்றும் துடிப்பானச் சைவ உணவுகளை இரசிகர்கள் எதிர்ப்பார்க்கலாம். உணவின் சுவை மற்றும் அமைப்புகளை மேம்படுத்தும் பாலின் பயன்பட்டைக் குறித்த உதவிக்குறிப்புகளை இரசிகர்கள் எதிர்ப்பார்க்கலாம்.


