ஈப்போ, மே 15-
ஆர்.டி.எம் பேராவின் 55வது நிறைவு விழாவை முன்னிட்டு, தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஊடகத் தொடர்பான சிறப்பு பயிற்சி பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்பயிற்சி பட்டறை மே 11ம் நாள் , ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளியில் நடைப்பெற்றது. 30 மாணவர்கள் கலந்து கொண்ட, அந்த பயிற்சி பட்டறையில், கதை வரைப்படம் தயாரிக்கும் முறைகள் குறித்து கற்றுத்தரப்பட்டது.
இப்பட்டறையின் அடுத்த கட்ட நடவடிக்கையாக , பேரா ஆர் டி எம் , இப்பள்ளி மாணவர்களுடன் இணைந்து தேசிய தின சிறப்பு காணொளி ஒன்றை தயாரிக்கவுள்ளது.

இக்காணொளி ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்படும். இப்பயிற்சி பட்டறையின் ஒரு பகுதியாக ஒளிப்பரப்பு துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது


