Homeஅரசியல்பிரதமருடன் மனிதவள அமைச்சர் ஜப்பானுக்குப் பயணம்

பிரதமருடன் மனிதவள அமைச்சர் ஜப்பானுக்குப் பயணம்

கோலாலம்பூர், மே 24-

ஜப்பானுடனான வர்த்தக உறவை மேம்படுத்து மலேசியப் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரியுடன் மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம் சரவணன், மே 25 முதல் 28ஆம் நாள் வரை ஜப்பானுக்கு அதிகாரப்பூர்வமான பயணத்தை மேற்கொள்கிறார்.

மலேசியாவில் இருக்கும் திறமையான தொழிலாளர்களை ஜப்பானுக்கு அனுப்புவது தொடர்பாக மலேசிய அரசுக்கும் ஜப்பான் அரசுக்கும் இடையே இரு தரப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் இந்த சந்திப்பில் இறுதி செய்யப்பட்ட கையெழுத்திடப்படவிருக்கின்றது.

திறமையான தொழிலாளர்கள் ஜப்பானில் வேலை செய்ய அந்நாட்டு நீதித்துறை அமைச்சருடன் இந்த இரு தரப்பு ஒப்பந்தத்தில் மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ சரவணன் கையெழுத்திடவிருக்கின்றார்.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் ஜப்பானின் வெளியுறவு அமைச்சு, தொழிலாளர் சுகாதார நல அமைச்சு ஆகியவற்றுடன் தேசிய காவல் துறையும் இணைக்கப்பட்டுள்ளது.

வன்பொருள், இயந்திர பாகங்கள் தொழில், தொழில்துறை இயந்திரத் தொழில், மின்சாரம், மின்னணுவியல் & தகவல் தொழில், கப்பல் கட்டுதல் & கப்பல் இயந்திரத் தொழில், ஆட்டோமொபைல் பழுது மற்றும் பராமரிப்புத் தொழில் மற்றும் விமானப் போக்குவரத்துத் தொழில். ஆகியவை இந்த உடன்படிக்கையில் அடங்கும்.

உள்ளூர் தொழிலாளர்களிடையே திறமையான பணியாளர்களை உருவாக்க உதவுவதோடு, நாட்டின் தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சியை (TVET) உயர்த்துவதே இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் முதமை நோக்கமாகும்.

அதோடு மலேசியத் தொழிலாளர்களுக்கு ஜப்பானில் அனுபவம் மற்றும் நிபுணத்துவம் பெற ஒரு வாய்ப்பாக அமையும். பின்னர் அவர்கள் நாடு திரும்பும் போது மலேசியாவில் தொடர்புடைய தொழில்களில் பங்களிக்க முடியும்.

தேசிய வேலைவாய்ப்பில் 35 விழுக்காடு திறமையான தொழிலாளர்களின் இலக்கை அடைவதற்காக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட தொலைநோக்கு 2030க்கு (WKB 2030) ஏற்ப இந்த உடன்படிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தாம் டோக்கியோவில் இருந்தபோது உலகின் முதல் சைபோர்க் ரோபோவை உருவாக்கிய சைபர்டைன் ஸ்டியோவிற்கு சென்றிருந்ததாகவும் அது அதுநவீன் நியூரோ – ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்பம் (Hybrid Assistive Limb) சார்ந்தது என்பதை அறிந்து கொண்டதாகக் கூறினார்.

எதிர்காலத்தில் பேராக்கில் கட்டப்படவுள்ள தேசிய நரம்பியல்-ரோபாட்டிக்ஸ் மற்றும் சைபர்னிக்ஸ் மறுவாழ்வு மையத்தை நிறுவுவதற்கு இது ஒரு அடித்தளமாக இருக்குமென்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more