கோலாலம்பூர், ஜூன் 7-
தமது 25 ஆண்டுக்கால கலைப் பயணத்தின் மிகப் பெரிய கொண்டாட்டமாக ஜூலை 16,17 ஆம் தேதிகளில் புக்கிட் ஜாலில் அக்ஸியாதா அரெனாவில் நடைபெறும் யுவன் 25 இசை நிகழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் கலந்து கொள்வார் என்பதை யுவன் சங்கர் ராஜா உறுதிப்படுத்தினார்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு யுவனின் இசை நிகழ்ச்சி மலேசியாவில் நடைபெறுவதால் அதற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. முன்னதாக சிம்பு மட்டுமின்றி பல முன்னணி கலைஞர்கள் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் யுவன் குறிப்பிட்டார்.
மலேசியாவின் முதன்மை இசை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான மாலிக் ஸ்ட்ரிம் காப்பிராஷன் உரிமையாளர் டத்தோ அப்துல் மாலிக் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

2000ஆம் ஆண்டு புகழ் பெற்ற தமது பாடல்களை இந்த இசை நிகழ்ச்சியில் பாடவிருப்பதாகவும், குறிப்பாக, இரவா பகலா, முன் பனியா முதல் மழையா, இது காதலா முதல் காதலா போன்ற பாடல்களும் இந்த இசை நிகழ்ச்சியில் இடம்பெறுமென்பதை யுவன் உறுதிப்படுத்தினார்.
முன்னதாக ஜூலை 16ஆம் தேதி நடக்கும் முதல் நாள் யுவன் 25 இசை நிகழ்ச்சிக்கான 9000 டிக்கெட்கள் 2 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன. இந்நிலையில் அடுத்த நாள் 17ஆம் தேதி ‘ரௌடி பேபி நைட்’ எனும் இசை நிகழ்ச்சிக்கான அறிமுக விழாவில் கலந்து கொண்ட யுவன், இது முற்றிலும் தமது இரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் இசை நிகழ்ச்சியாக இருக்கும் என நிகழ்ச்சியில் ஏற்பாட்டாளரான டத்தோ அப்துல் மாலிக் தெரிவித்தார்.
”துபாய் சென்ற போது தற்செயலாக யுவனைச் சந்தித்தேன். கோலாலம்பூரில் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யலாமா? என கேட்டேன். உடனே சம்மதம் தெரிவித்தார். முதல் நாள் டிக்கெட்களின் விற்பனை எங்களை மிளிர வைத்தது. யுவனின் ஆயிரக்கணக்கான இரசிகர்கள் டிக்கெட் கிடைக்கவில்லை என கூறியதன் விளைவான இரண்டாம் நாள் ரௌடி பேபி நைட் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம்” என மாலிக் கூறினார்.
நாளை 08/06/2022 மதியம் 2 மணி முதல் www.myticketasia.asia என்ற அகப்பக்கம் வாயிலாக டிக்கெட்களை வாங்கலாம்.
இந்த விற்பனை 1 மணி நேரத்தில் முடிவடைந்துவிடுமெனத் தாம் நம்புவதாகவும் டத்தோ அப்துல் மாலிக் குறிப்பிட்டார்.
யுவன் 25 ரௌடி பேபி நைட்
டிக்கெட் விலை
RM 2500 (MIP)
RM 1200 (VIP)
RM 495 (Diamond
RM 395 (Platinum)
RM 255 (Gold)
RM 155 (Silver)
RM 105 (Bronze)
அலைப்பேசி எண் : 0386050196
டிக்கெட் விவரம் எண் : 01160761667


