புக்கிட் ஜாலில், ஜூன் 14-
42 ஆண்டுகளுக்குப் பிறகு 2023ஆம் ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணப் போட்டிக்கு மலேசியயா தகுதி பெற்று வரலாற்றுச் சாதனைப் படைத்தது. புதிய நிர்வாகி கிம் பன் கொன் தலைமையில் களமிறங்கியிருக்கும் மலேசியா இ குழுவின் இறுதி ஆட்டத்தில் வங்காள தேச அணியை 4-1 என்ற கோல் எண்ணிக்கையில் வீழ்த்தியது.
ஆட்டத்தின் 16ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை ஷாபபி ரஷிட் கோலாகினார். இருப்பினும் ஆட்டத்தின் 31ஆவதுமிடத்தில் முகமட் இப்ராஹிம் மூலம் வங்காள தேசம் ஆட்டத்தைச் சமப்படுத்தியது.
தொடர் தாக்குதல்களை முன்னெடுத்த மலேசிய அணி 38ஆவது நிமிடத்தில் டியோன் கூல்ஸ் மூலம் கோலை புகுத்தி முன்னிலைப் பெற்றது. இதனால் முதல் பாதி ஆட்டம் 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் மலேசியாவிற்குச் சாதகமாக முடிந்தது.
பிற்பாதி ஆட்டம் தொங்கியது முதலே மலேசியா மீண்டும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் காரணமாக 47ஆவது நிமிடத்தில் ஷாபிக் அமாட் மலேசிய அணிக்கான கோலை புகுத்திய நிலையில் மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கிய பிஜே சிட்டியின் தாக்குதல் ஆட்டக்காரரான டேரன் லோக் தேசிய அணிக்கான 4ஆவது கோலை புகுத்தினார்.
42ஆண்டுகளுக்குப் பிறகு மலேசிய ஆசியக் கிண்ண போட்டிக்குத் தகுதி பெற்றிருப்பதால் ஒட்டுமொத்த மலேசியர்களும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்துள்ளார்கள்.
2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கால்பந்து போட்டி ஜூன் 16 தொடங்கி ஜூலை 16ஆம் நாள் வரை சீனாவில் நடைபெறுகின்றது.