Homeசமூகம்நோய்த்தொற்றால் வருமானம் இழந்த கலைஞர்களுக்கு உதவும் வகையில் நவரச கலை இரவு!

நோய்த்தொற்றால் வருமானம் இழந்த கலைஞர்களுக்கு உதவும் வகையில் நவரச கலை இரவு!

ஈப்போ, ஜூலை 9-

கோவிட் தொற்றுனால் நம்முடைய கலைஞர்கள் வாய்ப்புகளையும் பொருளாதாரத்தையும் இழந்துள்ளனர்.

அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க பேராக் மாநில கிந்தா வட்டார சமுகநல, விளையாட்டு துறை, கலை கலாச்சார இயக்கம் இன்று ஜூலை 9 ஆம் தேதி  இரவு 7 . 30 மணிக்கு மேல் நவரசக் கலை இரவினை நடத்துவதாக அதன் தலைவர், பி.யுவராஜன் கூறினார்,

கோலாலம்பூர் அன்பு மலர்களே கலைக்குழுவுடன் இணைந்து நடத்தும் இந்நிகழ்வு கம்போங் பாரு புந்தோங், டேவான் பெர்சாத்துவான் பாயிடா பெர்சாமா மண்டபத்தில் ( பழைய குளோரி தியேட்டர்) நடைபெறுகிறது.

49 கலைஞர்கள் உள்ளடக்கிய இந்நிகழ்வில் ஆடல், பாடல், பல குரல் படைப்பு என பல அங்கங்கள் உண்டு.  முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இந்த கலைவிழா வில் பொது மக்கள் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

இந்த கலைநிகழ்ச்சியில் 10 தொழிலதிபர்கள் வருகை புரிந்து நமது கலைஞர்களுக்கு உதவி புரிவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்

spot_img

latest articles

explore more