தெலுக் இந்தான், ஜூலை 10-
மலேசிய நாட்டில் திருத்தலங்கள் அமைந்திருப்பது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், இந்தியா நாட்டிலுள்ள திருத்தலங்களுக்கு ஈடாக இல்லை என்பது பரவலாக இருக்கும் விஷயமே. ஆனால், ஒரு தெரு முழுவதும் ஆசிரமம், தியான மையம், ஆஞ்சிநேயர் திருத்தலம், நடராஜர் திருத்தலம், பாண்டுரங்கன் ருக்குமணி திருத்தலம், விஷ்ணு அவதாரம் உட்பட பல அற்புத திருத்தலங்களை கொண்டிருக்கும் சிறப்பு இங்குள்ள சங்காட் ஷோங், ஸ்ரீ ஞானானந்ந புரத்தை சேரும்.
இத்தணை சிறப்புமிக்க ஆலயத்தில் கடந்த ஜூலை 6 ஆம் தேதியன்று அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பிகை சமேத ஆனந்த நடராஜர் 12 ஜோதிர்லிங்க திருத்தலத்தின் நூதன பிம்ப அஷ்டபந்தன பிரதிஷ்டாபன மகா கும்பாபிஷேகம் பெருஞ்சாந்தி விழா மிக சிறப்பாக, ஏராளமான பக்தர்கள் நடைப்பெற்றது.

மலேசிய ஸ்ரீ ஞானானந்த நாம சங்கீர்த்தன மண்டலியின் ஏற்பாட்டி நடைப்பெற்ற இவ்விழாவில் வெங்கடாசலபதி அலமேலு அம்மாளும் ஸ்தாபனம் செய்யப்பட்டத. அதுனுடன், ஸ்ரீ ஞானாம்பிகை, ஸ்ரீ ஞானபுரிஸ்வரருக்கும் ஸ்தாபனம் செய்யப்பட்டது.
இதனிடையே, மலேசிய ஸ்ரீ ஞானானந்த நாம சங்கீர்த்தன மண்டலியின் காப்பாளர், ஸ்ரீ பகவான் ஜி சுவாமிகள் பேசுகையில், எல்லா வல்ல குருபெருமான் ஆசிர்வாத்தாலும் , பரமாத்வான் கருணையாலும், தெற்கிழக்காசியாவிலேயே இந்தியாவிற்கு அடுத்து 12 ஜோதிர்லிங்கம் அமைந்திருக்கும் ஆனந்த நடராஜர், சிவகாமி அம்மா, நந்தி பகவான் ஒரு சேர இருப்பது இங்கு மட்டும்தான். சிதம்பரத்தில் இருக்கும் நடராஜர் போல் இங்கும் காட்சியளிக்கிறார்.

இதற்கு மேலாக விமானம் ஐம்பொண்ணால் அமைந்துள்ளது. இந்தியாவில் கூட 12 ஜோதிலிங்கம் தனித்தனி திருத்தலத்தலங்களில் அமைந்துள்ளது. ஆனால் இந்த திருத்தலத்தில் ஒரே இடத்தில் ஜோதிலிங்கம் அமைந்துள்ளது.
இந்தியாவிலுள்ள தலங்களலிருந்து எடுக்கப்பட்ட மண்கள் ஜோதிர்லிங்க கீழ் ஸ்தாபனம் செய்யப்பட்டது. பக்தர்கள் இங்கு வந்து ஜோதிர்லிங்கங்களை வழிப்படலாம். ஜோதிர்லிங்கம் சுயமாக இருக்கிறது. இந்த திருத்தலம் 150 நாட்களில் உருவாக்ப்பட்டது. அடுத்து, இந்த மண்டலியில் முதியோர் இல்லம், ஆதரவற்ற இல்லம்ஸ்ரீ கலை கலாச்சார மண்டபம் அமையவுள்ளது என்றார்.
இந்த கும்பாபிஷேகத்திற்கு பங்களிப்பு ஆற்றிய நல்லுங்கள், நன்கொடையாளர்கள் அனைவருக்கும் லேசிய ஸ்ரீ ஞானானந்த நாம சங்கீர்த்தன மண்டலி நிர்வாகம் நன்றியை தெரிவித்தனர்.

