Homeமலேசியாஉள்ளூர் ஆட்டிறைச்சியின் விலை உயரும்?

உள்ளூர் ஆட்டிறைச்சியின் விலை உயரும்?

ஜோர்ஜ்டவுன், ஜூலை 28-
ஆடுகளைத் தற்போது சிறு எண்ணிக்கையிலான விவசாயிகள்தான் வளர்ப்பதால் அடுத்து வரும் மாதங்களில் உள்ளூர் ஆட்டிறைச்சியின் விலை மிகவும் அதிகமாக உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆட்டிறைச்சி விற்பனையாளர் அப்துல் காதிர் முகமட் ஹாசான், (வயது 81) தெரிவித்தார்.

 வரும் தீபாவளிப் பெருநாளை முன்னிட்டு ஆட்டிறைச்சிக்கானக் கோரிக்கைகள் அதிகரிக்கும் போது அதற்கான விலை ஒரேயடியாக உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தற்போதைக்கு இதன் விலை கிலோவுக்கு வெ.65 ஆகும்.

இப்போது உள்ளூர் ஆடு வளர்ப்பவர்களின் எண்ணிக்கைக் குறைவாய் இருப்பதால்தான் ஆட்டு இறைச்சிக்கானக் கையிருப்பும் குறைவாய் உள்ளது.

“நான் இப்போது உள்ளூர் ஆட்டிறைச்சியைக் காட்டிலும் இறக்குமதிச் செய்யப்பட்ட ஆட்டிறைச்சியை மிகவும் மலிவாக விற்பனைச் செய்கிறேன்.”ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆட்டிறைச்சி கிலோவுக்கு வெ.55 விலையில் விற்கப்படுகிறது. இது சந்தைக்கு வருவோரிடையே மிகவும் பிரபலமாகி விட்டது என்று பத்திரிகையாளர்களிடம் அப்துல் காதிர் முகமட் ஹாசான் குறிப்பிட்டார்.

spot_img

latest articles

explore more