ஈப்போ, செப். 18

பேரா மாநில இந்து சங்கத்தின் 44 ஆம் ஆண்டு திரு முறை விழா ஈப்போவில் மிகவும் சிறப்புடன் நடைபெற்றது.

இந்த விழாவில் 17 வட்டாரப் பேரவையில்  இருந்து  603 மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் மனித வள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம் . சரவணன் சார்பில் மாநில மந்திரி புசாரின் இந்திய விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரி டத்தோ   வ. இளங்கோ கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்து சமய வளர்ச்சிக்கு மஇகா தொடர்ந்து ஆதரவு அளித்து வரும். இதன் அடிப்படையில் மஇகா தேசிய துணைத் தலைவரும் மனித வள அமைச்சருமான டத்தோ ஸ்ரீ எம் . சரவணன்  10 ஆயிரம் வெள்ளி நிதியை வழங்கியுள்ளதாக அவர்  தமது உரையில் குறிப்பிட்டார்.

சமய வளர்ச்சிக்கு மாநில இந்து சங்கம் அதன் தலைவர் பொன் . சந்திரன் தலைமையில சிறப்புடன் ஆற்றி வரும் சேவையையும்  வெகுவாகப் பாராட்டினார்.

மேலும் பேசிய அவர் , சமய ஈடுபாட்டில் இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் ஆகவே, ஆலய நிர்வாகங்களை இளைஞர்களை அதிகமாக சேர்க்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆலயங்களில் பொறுப்புகள் வகிப்பவர்களுக்கு சமய கல்வி அவசியம் இருக்கவேண்டும் . அதன் வழி ஆலயங்களை சிறப்புடன் செயலாற்ற வழி வகுக்கும் என்றார்.

கடந்த 44 ஆண்டுகளாக மாநில இந்து சங்கம் இந்த விழாவை நடத்தி வருகிறது. அதற்கு வட்டார இந்து சங்க பொறுப்பாளர்கள் நல்ல ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும்  பொன். சந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார்.

இந்தப் போட்டியில் தேர்வாகும் 67 பேர் தேசிய நிலையில் நடைபெறும் திருமுறை ஓதும் விழாவில் பங்கேற்பர் என்றார் அவர்.

கடந்த இண்டு முறை தேசிய நிலையில் பேரா முதல் நிலையில் வெற்றி பெற்றுள்ளது.  இந்த ஆண்டும் வெற்றியை நிலை நாட்டி கிண்ணத்தை வெல்லும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.