கோலாலம்பூர் செப்டம்பர் 26-
நம்பிக்கை குழுமத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ‘நம்பிக்கை நட்சத்திர விருது’ விழா அக்டோபர் 8ஆம் தேதி கோலாலம்பூர் துன் இஸ்மாயில் மண்டபம், உலக வாணிப மையத்தில் மிக விமரிசையாக நடைபெறவிருக்கின்றது.
இந்நாட்டில் நமது இந்தியர்களின் அடையாளம் தொடர்ந்து நிலைபெறுவதற்கு உழைத்த சாதனையாளர்களை அடையாளம் கண்டு கௌரவிக்கும் ஓர் உன்னத நோக்கத்தில் இந்த விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த மருத்துவர், இளம் தொழில் முனைவோர், முன்னோடி வர்த்தகர், சிறந்த சமூக இயக்கம், சிறந்த தமிழ்ப்பள்ளி, சிறந்த ஆசிரியர், சிறந்த பேராசிரியர், சிறந்த சேவையாளர் என பல்வேறு துறைகளைச் சார்ந்த 16 பெருந்தகைகளுக்கு விருதுகள் வழங்கப்படும் என்று நம்பிக்கை குழுமத்தின் தலைவர் டத்தோஸ்ரீ முகம்மது இக்பால் தெரிவித்தார்.
“இவற்றில் கலை, சமூக ஊடகம் சார்ந்த விருதுகளும் வழங்கப்படவிருக்கின்றன. இந்த 12 விருதுகளை மக்களின் வாக்குகள் அடிப்படையில் நாங்கள் தேர்ந்தெடுப்போம்” என்று இங்குள்ள உலக வாணிப மையத்தில் மக்கள் தேர்வு விருதுகளுக்கான வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சி மீதான செய்தியாளர்கள் கூட்டத்தில் விவரித்தார்.
” சிறந்த வானொலி அறிவிப்பாளர் பிரிவில் 10 பேர் வேட்பாளர்களாகவும், சமூக ஊடக உச்ச நட்சத்திர பிரிவில் 5 பேர் வேட்பாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் மக்களின் மகத்தான ஆதரவைப் பெற்று அதிக வாக்குகளை பெறும் நபர் சம்பந்தப்பட்ட விருதினைச் தட்டிச் செல்வார்.
சிறந்த வானொலி அறிவிப்பாளர் பிரிவில் 10 பேர் உள்ளனர் . மின்னல் சார்பாக, தெய்வீகன், திரேசா, சுகன்யா, பிரேமா, சத்தியா ஆகியோர் இடம்பெற்றுள்ள நிலையில், ராகா சார்பாக உதயா, சுரேஷ், அகிலா, ரேவதி, கோகுல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
சிறந்த செய்தி வாசிப்பாளர் பிரிவில் ஆர்டிஎம் ஜெயமுருகன், சூரியா சம்பத், பெர்னாமா கவிதா முத்துகிருஷ்ணன், கார்த்திகா, ஆஸ்ட்ரோ மகேந்திரன், ஷாலினி பிரியா மோகன் ஆகியோர் வேட்பாளர்களாகத் திகழ்கின்றார்.
சிறந்த படைப்பு பிரிவில் பூச்சாண்டி, மூன்றாம் அதிகாரம், அவள் தேடியது, பரமபதம், நரிகள், மிஸ்டர் பேயி ஆகியவை இடம்பெற்றுள்ள நிலையில் சிறந்த இயக்குநர் பட்டியலில் கார்த்திக் சாமளன், எஸ்டி புவனேந்திரன், கவிநந்தன், கபிலன், வதனி, ஜேகே விக்கி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
சிறந்த நடிகைக்கான மக்கள் தேர்வில் கவிதா தியாகராஜன், பாசினி சிவக்குமார், மூன்நிலா, சன்டின் கோர், சுபாஷினி, ஹேமாஜி இடம் பெற்றுள்ளார்கள். சிறந்த நடிகர் பட்டியலில் ஹரிதாஸ், இர்ஃபான், ஜேம்ஸ் ஆரோக்கியசாமி, ரவின் ராவ், குபேன் மகாதேவன், யுவராஜ் கிருஷ்ணசாமி ஆகியோர் உள்ளனர்.
சமூக ஊடகம் சார்ந்த சிறந்த நகைச்சுவையாளர் பட்டியலில் ஜோக்கி கிங், ஜோஸ்வா, தியாகு, நந்தா, நேரு, ரஞ்சினி ஆகியோர் இடம்பெற்றுள்ள நிலையில் சிறந்த நடனக் கலைஞர் பிரிவில் ராதை, விஷாலினி, விமல், கிர்த்திகா கயல், துர்காஷினி, உமா மகேஸ்வரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
சமூக ஊடகத்தில் சிறந்த வர்த்தகர் யார் என்பதை மக்கள் முடிவு செய்ய 6 பேரை தேர்ந்தெடுத்துள்ளோம். அதில் மதன் எட்வெர்ட், ஆர்ஜே பியூட்டி, தேவ், குமுதா, எங்க அம்மாயி, பிரிஸ்சஸ் மீதி ஆகியோர் உள்ளனர். சிறந்த ஜோடிக்கான தேர்வில் ஃபியாஸ், நிஷா, ஜேபி ஜேன்சி, சாலினி, புடாக் மாமா, பிலேஷ் புயூட்டி ஆகிய ஜோடிகள் இடம் பெற்றுள்ளார்கள்.
சிறந்த சிந்தனையாளர் பட்டியலில் ஆசிரியர் ஷேர்லி, டாக்டர் புனிதன், உஷா வீரசேனன், சந்தனா துரோனாச்சாரியார், டாக்டர் கலை, கோபிநாதன் ஆகியோர் உள்ளனர்.
அதில் கடைசி விருதாக சமூக ஊடக உச்ச நட்சத்திரம்
பட்டியலில் பவித்ரா ரெட்டி, டாக்டர் சந்திரா, நிலா லிங்கேஸ், சுபீர் கான், கெஷிகா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தப் பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் யாருக்கு விருது கிடைக்க வேண்டுமென்பதை மக்கள்தான் முடிவு செய்யவிருக்கின்றார்கள். இன்று தொடங்கி அக்டோபர் 6ஆம் தேதி வரையில் https://awards.nambikkai.com.my என்ற இணையத்தளத்தில் வாக்களிக்கலாம். வாக்குகளை பதிவு செய்து பேராதரவை நல்குமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இந்த விருது விழா குறித்த மேல் விவரங்களுக்கு, நம்பிக்கை குழுமத்தின் தலைமை மேலாளர் தயாளன் சண்முகத்தை 019-9384818 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

