கோலாலம்பூர் செப் 24

புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெற்று வரும் சுக்மா போட்டியில் கிரிக்கெட் போட்டியில் களம் இறங்கிய பேரா தங்க பதக்கத்தை வென்றது.

இறுதி ஆட்டத்தை கோலாலம்பூரிடம் விளையாடி 8 புள்ளிகளை பெற்று பேரா வென்றது.

பேரா குழுவில் இடம் பெற்ற த. பிரசாந்த் தமிழரசன் மற்றும் பி. தனசேகன் ஆகிய இருவரும் தங்களின் திறனை வெளிப்படுத்தினர்.

இதில் கோலாலம்பூர் வெள்ளி மற்றும் சிலாங்கூர் வெண்கல பதக்கத்தை வென்றது.

இதனிடையே, நேற்று சுக்மா போட்டியில் சிலம்பம் கொம்பேட் விளையாட்டில் தங்கேஸ்வரன் விஜயன் தங்கம் வென்றார்.