ஓ மை பேக்கரி (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)| இரவு 7.30 மணி, வெள்ளிஇயக்குநர்: ஜெய் தேவ்தொகுப்பாளினி: வனேசா க்ரூஸ்வகை: சமையல் நிகழ்ச்சி வேகவைத்துச் சுடுர உணவுகளைத் தயாரிக்கும் முறையை இந்தச் சமையல் நிகழ்ச்சி சித்தறிக்கின்றது. வீட்டுப் பேக்கர்கள் மற்றும் பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் உட்படச் சிறப்பு விருந்தினர்களுடன் சுவையான மற்றும் இனிப்பு வகைகள் பிரபலப் பேஸ்ட்ரி செஃப், செஃப் ஹன்ஸ் ராஜாவால் தயாரிக்கப்படும். | |
கண்ணா முறுக்கு தின்ன ஆசையா (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)ஆஸ்ட்ரோ உலகம் | 18 – 22 அக்டோபர், மாலை 6 மணிநடிகர்கள்: விக்கி ராவ், ஷேபி, ஹம்சினி, குபேன் & ஹேமா ஜிஇயக்குநர்: சுதேசன்வகை: திகில் நகைச்சுவை வலைத் தொடர் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை, தீபாவளி. ஆனால், நம்மக் கதாநாயகன், ஜீவா விஷயத்தில் அவ்வாறு இல்லை. அவரதுத் தப்பிக்கும் திட்டம் அல்லது அவர் அழைக்கும் “கனவு விடுமுறையின்” போது, ஒரு பேய் வீடு, ஓர் அழகானப் பேய் மற்றும் பகவான் கிருஷ்ணரை உள்ளடக்கிய எதிர்பாராதத் திருப்பத்தை ஜீவா சந்திக்கிறார். கிருஷ்ணரும் முறுக்கும் காப்பாற்றுவார்களா? | |
ஜீ தமிழ் சாம்ராஜ்ஜியம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)ஜீ தமிழ் எச்டி (அலைவரிசை 223) | 23-24 அக்டோபர், பிற்பகல் 12 மணிதொகுப்பாளர்கள்: விஜய், அர்ச்சனா, கதிர், ஆனந்தி & கிகிவகை: பொழுதுபோக்கு நிகழ்ச்சி 15 ஆண்டுகளாக ஜீ தமிழ் பயணத்தில் அங்கம் வகித்தத் தொகுப்பாளர்கள் மற்றும் கலைஞர்களைக் கௌரவிக்கும் பிரமாண்டக் கொண்டாட்ட நிகழ்வு. கலைஞர்கள் தங்கள் பயணத்தின் சிறப்பம்சங்களையும் நினைவுகளையும் ஜீ தமிழுடன் பகிர்ந்துக் கொள்வார்கள். பிரபலங்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ப்பர். | |
மை டியர் பூதம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)ஜீ தமிழ் எச்டி (அலைவரிசை 223) | 23 அக்டோபர், மாலை 3.35 மணிநடிகர்கள்: பிரபுதேவா, அஷ்வந்த் அசோக்குமார், ரம்யா நம்பீசன் & இமான் அண்ணாச்சிவகை: நகைச்சுவை / கற்பனைத் திரைப்படம் பண்ணு எனும் குழந்தை, ஒரு குகையில் ஒரு விளக்கைக் காண்கிறார். அவர் அதைத் திறந்தப் பிறகு அனைத்து ஜீனிகளின் ராஜாவானக் கார்க்கிமுகி விடுப்படுகிறது. ஜீனிச் சிறுவனின் அன்றாடப் பிரச்சனைகளுக்கு உதவுகிறது. | |
ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட் (Rocketry: The Nambi Effect) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116) | 23 அக்டோபர், மாலை 4.30 மணிநடிகர்கள்: ஷாருக்கான், ஆர். மாதவன் & சிம்ரன் வகை: வாழ்க்கை வரலாற்று நாடகம் இந்தியாவின் முன்னோடி ராக்கெட் விஞ்ஞானிகளில் ஒருவரான நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டக் கதை. அவரதுச் சாதனைகள், நாட்டின் விண்வெளிப் பயணத்தின் மீதானப் பற்று, அவரது ஈடு இணையற்ற அர்ப்பணிப்பு மற்றும் அவரது வாழ்க்கையில் தனிப்பட்ட மற்றும் தொழில்முறைப் பின்னடைவாக மாறியக் குற்றச்சாட்டு ஆகியவற்றை இச்சுயசரிதை விவரிக்கிறது. | |
அமர்க்கள தீபாவளி 2022 (நேரலை)ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)| 23 அக்டோபர், இரவு 10 மணிநிர்வாகத் தயாரிப்பாளர்: காமாச்சிதொகுப்பாளர்: ஆனந்தாவகை: பல்வேறு நிகழ்ச்சி சிங்கப்பூரில் இருந்து நேரலைத் தீபாவளி நிகழ்ச்சி. | |
அழகு குட்டி செல்லம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)| 24 அக்டோபர், பிற்பகல் 12.30 மணிநடிகர்: விகடகவி மகேன்இயக்குநர்: பிரீயாதொகுப்பாளர்: டெனெஸ் குமார்வகை: பல்வேறு இசை நிகழ்ச்சி குழந்தைகள் பங்கேற்கும் கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியைப் பிரபலக் கலைஞர் டெனெஸ் குமார் தொகுத்து வழங்குவார், மற்றும் விகடகவி மகேன் கிருஷ்ணர் வேடத்தில் பங்கேற்ப்பார். பேஷன் ஷோ, விளையாட்டு மற்றும் நடன நிகழ்ச்சிகளில் குழந்தைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். | |
உங்கள் விருப்பம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 24 அக்டோபர், பிற்பகல் 12.30 மணிநடிகர்கள்: டெனெஸ் குமார், விகடகவி மகேன் & சந்தினி கோர்இயக்குநர்: அரவிந்த்வகை: பல்வேறு நிகழ்ச்சி இது ஒரு பாடல் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியாகும். இதன் மூலம் பொது மக்களிடம் சில திரைப்படக் கேள்விகள் கேட்கப்பட்டு அவர்களுக்குப் பிடித்தப் பாடல்கள் வெகுமதியாக ஒளிபரப்படும். | |
நரை வந்த பிறகு (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)| 24 அக்டோபர், பிற்பகல் 1.30 மணிநடிகர்கள்: மாறன், டேவிட், யுவராஜ், கோகிலா குமாரசாமி, ஸ்ரீ குமரன் & அகல்யாஇயக்குநர்: சந்தோஷ் கேசவன்வகை: நாடக டெலிமூவி செய்ய வேண்டியவைகளின் விருப்பப் பட்டியலுடன் சாலைப் பயணத்தைத் தொடங்க முடிவுச் செய்யும் இரண்டு நண்பர்களான ராமன் மற்றும் சந்திரன் பற்றியக் கதை. | |
காமெடி டிவி (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 24 அக்டோபர், பிற்பகல் 1.30 மணிநடிகர்கள்: பச்சாய் புளிங்கோ, சேச் ஹீரோஸ், பிரகடூன்ஸ், கதையே இல்ல & புடாக் மாமாக்ஸ்இயக்குநர்: ராஜின்வகை: காமெடி ஸ்கெட்ச் டிவி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், இசைக் காணொளிகள் மற்றும் பிறப் பாப்-கலாச்சாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய நகைச்சுவை ஸ்கெட்ச் தொடர். | |
கூகுள் குட்டப்பா (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)கலர்ஸ் தமிழ் எச்டி (அலைவரிசை 222)| 24 அக்டோபர், மாலை 3.30 மணிநடிகர்கள்: யோகி பாபு, லாஸ்லியா மரியநேசன் & கே.எஸ். ரவிக்குமார்வகை: நாடகத் திரைப்படம் ஒரு வழக்கமானப், பழமைவாதச் சிறு நகரக் கிராமவாசி மற்றும் அவரது மகன் தொழிலின் காரணமாக வீட்டை விட்டு வெளியேற நேரிடுகிறது. ஒரு இயந்திர மனிதன் அவர்களின் வாழ்க்கையில் நுழைந்து அவர்களின் வெறுமையை நிரப்பும்போது அவர்களின் உறவில் ஒரு அன்பானத் திருப்பம் ஏற்படுகிறது. | |
காட்டேரி (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)ஜீ தமிழ் எச்டி (அலைவரிசை 223) | 24 அக்டோபர், மாலை 3.35 மணிநடிகர்கள்: வைபவ், கருணாகரன், சோனம் பஜ்வா & ஆத்மிகாவகை: திகில் திரைப்படம் நண்பர்கள் குழுப் புதையல் வேட்டைக்குச் செல்லும் போதுப், பேய்களைச் சந்திக்கின்றனர். | |
பட்டாஸ்’உ படேப் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 24 அக்டோபர், இரவு 8 மணிநடிகர்கள்: ஜோஸ்வா மைக்கல், அகல்யா மணியம், லோகநாதன், ஈஸ்வரன் & பலர்இயக்குநர்: ஜோஸ்வா மைக்கல்வகை: விளையாட்டு நிகழ்ச்சி ‘படேப் (ஆனால் அந்த டீலிங் எனக்குப் புடிச்சிருக்கு)’ குழுப் பங்கேற்க்கும், பல்வேறுப் பிரிவுகளைக் கொண்டப் புவனன் வழிநடத்தும் ஒரு சுவாரஸ்யமானக் விளையாட்டு நிகழ்ச்சி. | |
ஐங்கரன் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)கலர்ஸ் தமிழ் எச்டி (அலைவரிசை 222)| 24 அக்டோபர், இரவு 8 மணிநடிகர்கள்: ஜி.வி. பிரகாஷ் குமார், மஹிமா நம்பியார், காளி வெங்கட், அருள்தாஸ் & ஆடுகளம் நரேன்வகை: அதிரடித் திரில்லர் திரைப்படம் ஓர் இளம் கண்டுபிடிப்பாளர் தனதுக் கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமைப் பெறப் போராடுகிறார். இறைச்சி மோசடி மற்றும் திருடனின் தீங்கு விளைவிக்கும் நோக்கங்களிலிருந்துப் பொதுமக்களைக் காப்பாற்றத் தனதுப் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்துகிறார். | |
தல தீபாவளி விருந்து (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)| 24 அக்டோபர், இரவு 9 மணி நடிகர்கள்: பாஷினி & கேசவன்இயக்குநர்: பிரியாதொகுப்பாளினி: புஷ்பாவகை: சமையல் நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சியில் பல்வேறு வகையானச் சைவ உணவுகள் தனித்துவமானச் சமையல் பாணிகளைக் கொண்டிருக்கும். புதுமணத் தம்பதிகளானப் பாஷினி மற்றும் கேசவன் இதில் கலந்துக் கொள்வர். | |
நான் பிரதீப் குமார் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 25 அக்டோபர், பிற்பகல் 12 மணி தொகுப்பாளர்கள்: அஹிலா & செயிண்ட்வகை: கச்சேரி பிரபலப் பாடகர், பிரதீப் குமாரின் சிறந்த மற்றும் பிரபலமானப் பாடல்களைக் கொண்ட அவரது முதல் மலேசிய நேரலை இசை நிகழ்ச்சி. | |
குட்டிப் பட்டாஸ் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)| 25 அக்டோபர், பிற்பகல் 1.30 மணி நடிகர்கள்: ஹேவோக் நவீன், ஹேவோக் மதன், திவ்யா நாயுடு & விஜயசாந்திஇயக்குநர்: சி.குமரேசன்வகை: இசை நகைச்சுவை டெலிமூவி நவீன் தயக்கத்துடன் தனது நோய்வாய்ப்பட்டத் தாயால் நடத்தப்படும் 12 குழந்தைகளைக் கொண்ட ஆதறவற்றோர் இல்லத்தை எடுத்து நடத்த ஒப்புக்கொள்கிறார். அவரது தாயார் திரும்பி வரும் வரைக் குழந்தைகளைக் கவனித்துக் கொண்டால், நவீன் தனது இலட்சியத்தைத் தொடர முடியும் என உறுதியளிக்கப்படுகிறது. ஆனால், குழந்தைகளில் ஒருவரான ஹர்விஷ் காணாமல் போகிறார். மற்றக் குழந்தைகளின் உதவியுடன், அவர் ஹர்விஷை வீட்டிற்கு அழைத்து வர வேண்டும். தெரு இசைக் கலைஞரான மதன் மற்றும் கீர்த்தி எனும் பெண்ணின் மீதுக் காதல் வயப்படும் போதுப் பணிச் சவாலாக மாறுகிறது. | |
குட்டிப் பட்டாஸ் ரகளை (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)| 25 அக்டோபர், மாலை 3 மணிநடிகர்கள்: ஹேவோக் நவீன் & ஹேவோக் மதன் தயாரிப்பாளர்: டத்தின் ஸ்ரீ ஷைலாதொகுப்பாளர்: கோகுவகை: விளையாட்டு நிகழ்ச்சி ஆதறவற்றோர் இல்லக் குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம். | |
பட்டாஸ் ஜோடி (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 25 அக்டோபர், மாலை 5.30 மணிநடிகர்கள்: விகடகவி மகேன், ரவின் ராவ், ஜெய்ஸ்ரீ & ஷாமினி ஷ்ரதாஇயக்குநர்: எஸ்.பாலச்சந்திரன்வகை: நாடக டெலிமூவி வேகமானக் கார்களின் மீது ஆர்வத்தைப் பகிர்ந்துக்கொண்டதன் மூலம், அவர்கள் அண்டை வீட்டாராக இருப்பதைக் கண்டுப்பிடிக்கும் ஓர் இளம் ஜோடி, தங்கள் மரியாதைக்குரியப் பெரியவர்களுக்கிடையேயான விரோதப் போக்கின் காரணமாகத் தங்களுக்குள் மலர்ந்தக் காதலை மறைக்க வேண்டியிருந்தது. | |
சிங்க பெண்ணின் தீபாவளி கலாட்டா (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201)| 25 அக்டோபர், மாலை 6 மணிதயாரிப்பாளர்: அண்ணன்வகை: விளையாட்டு நிகழ்ச்சி | |
பரமபதம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 25 அக்டோபர், இரவு 9 மணிநடிகர்கள்: அஹிலா, செயிண்ட், பாஷினி, மூனிலா, குபேன், விக்கி ராவ், ஷாமினி, டிஷாலினி, சந்தினி கோர், சாஸ்தன், சங்கபாலன், சூர்ய பிரகாஷ், துர்காஷினி, திருவள்ளுவன் & பலர்இயக்குநர்: நளினிவகை: விளையாட்டு நிகழ்ச்சி பல்வேறு ஆஸ்ட்ரோ விண்மீன் தொடர்களின் கலைஞர்களைக் கொண்டப் பாம்பு மற்றும் ஏணி விளையாட்டு நிகழ்ச்சி. அவர்கள் மேலேச் செல்லும் வழியில் தொடர்ச்சியான வேடிக்கையான மற்றும் உற்சாகமானப் பணிகளையும் தண்டனைகளையும் கடந்துச் செல்ல வேண்டும். | |
பட்டாஸ் ஜோடி கேம் ஷோ (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 26 அக்டோபர், இரவு 8 மணிநடிகர்கள்: விகடகவி மகேன், ரவின் ராவ், ஜெய்ஸ்ரீ, ஷாமினி ஷ்ரதா & பலர்இயக்குநர்: எஸ்.பாலச்சந்திரன்வகை: விளையாட்டு நிகழ்ச்சி ‘பட்டாஸ் ஜோடி’ டெலிமூவியின் கலைஞர்கள் பல்வேறுச் சவால்களில் பங்கேற்கும் விளையாட்டு நிகழ்ச்சி. | |
பபாட் ஜி (Fuffad Ji) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)BollyOne HD (அலைவரிசை 251) | 27 அக்டோபர், இரவு 9 மணிநடிகர்கள்: பின்னு தில்லான், குர்னம் புல்லர், ஜாஸ்மின் பஜ்வான் & ஜஸ்ஸி கில்வகை: நகைச்சுவை நாடகத் திரைப்படம் புதிய மருமகன் வருகையால், ஆதிக்கம் செலுத்தும் மருமகன் அர்ஜன் சிங்கின் முக்கியத்துவம் குறையத் தொடங்குகிறது. தங்கள் குடும்ப உறுப்பினர்களின் இதயங்களை வெல்லும் முயற்சியில், இருவருக்கும் இடையேப் போட்டி ஏற்படுகிறது. | |
தாய்க்குடம் பிரிட்ச் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) | 29 அக்டோபர், இரவு 9 மணிபாடகர்கள்: வியன், அனிஷ், அசோக், மிதுன், விபின் & மாதவ்இயக்குநர்: நளினிவகை: கச்சேரி தாய்க்குடம் பிரிட்சின் நேரலை இசை நிகழ்ச்சி. இந்தியாவின் நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய ஒலிகளின் கூறுகளைக் கொண்டுக் கட்டமைக்கப்பட்ட ஒலியமைப்பு. | |
பத்மஸ்ரீ ஹரிஹரன் லைவ் இன் புத்ராஜெயா 12 நவம்பர், இரவு 7 மணி, புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையம்பாடகர்கள்: பத்மஸ்ரீ ஹரிஹரன், ஹரி பிரியா, ஸ்ரீ நிஷா, குமரேஷ் கமலக்கண்ணன் & ஹஷ்மிதாவகை: கச்சேரி வீனஸ் புரொடக்ஷனுடன் இணைந்து ஆஸ்ட்ரோ 3 மணிநேரக் கச்சேரியைக் கொண்டுவருவதில் பெருமிதம் கொள்கிறது. ஹரிஹரன் 8-பீஸ் இசைக்குழு, “புல்லட்” பாடல் புகழ் ஹரி பிரியா, “சூப்பர் சிங்கர்” நட்சத்திரம் ஸ்ரீ நிஷா, உள்ளூர் திறமைகளானக் குமரேஷ் கமலக்கண்ணன் மற்றும் ஹஷ்மிதா ஆகியோருடன் இணைந்துப் படைப்புகளை வழங்குவார். | |
கஜன்24 நவம்பர் நாடு முழுவதும் உள்ளத் திரையரங்குகளில்நடிகர்கள்: டெனெஸ் குமார், ஜஸ்மின் மைக்கல் & அபிராமி (இந்தியா)இயக்குநர்: எஸ்.மதன்வகை: அதிரடி, நாடகம், காதல் திரைப்படம் ஜூனியர் டாக்டரானக் கௌதம் கவலையற்ற, இலட்சியமற்ற ஒரு வாழ்க்கையை நடத்துகிறார். மருத்துவச் சதியில் அவர் சிக்கிக் கொள்கிறார். அது அவரது வாழ்க்கைப் போக்கையே மாற்றுகிறது. ஒரு சிறந்த மருந்து நிறுவனத் தலைவரான விக்ரம் சாம்ராட்டுக்கு எதிரான நீதிக்கானப் போராட்டத்தில் அவரது வாழ்க்கையில் முக்கிய இரு பெண்களான யாழினி மற்றும் ஆஷிகா பலியாகும்போதுக் கதை மேலும் சுவாரஸ்சியமடைகிறது. காதலும், நட்பும் எவ்வாறு ஒருவரைத் தனது முழுத் திறனையும் உணர்ந்து வாழ்க்கையில் பெரிய உயரங்களை அடையச் செய்யும் என்பதைத் திரைப்படம் சித்தறிக்கிறது. |