செமினி, அக்.27–
தீபாவளித் திருநாளை முன்னிட்டு ஐ.பி.எப். உலு லாங்காட் இளைஞர், மகளிர் பிரிவுகளின்
ஏற்பாட்டில் 300 குடும்பங்களுக்கும் மேல் செமினி வட்டாரத்தில் ரின்ச்சிங் தோட்டம், டுனெடிங்
தோட்டம், தாமான் டான்ஸ்ரீ மாணிக்கவாசகம், தாமான் ஸ்ரீ செமினி மற்றும் செமினி சுற்று
வட்டாரத்திலுள்ள இதர பகுதிகளுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வுக்குச் சிறப்பு விருந்தினராக செமினி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், டத்தோ
ஜோஹான் அப்துல் அஜிஸ், ஐ.பி.எப். தலைமைச் செயலாளர் மோகன் ஆகியோர் கலந்து
கொண்டனர். இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் ஐ.பி.எப். தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர்
கணேஷ்குமார் சம்பந்தன், தேசிய மகளிர் பிரிவுத் தலைவி ராஜம்மாள் பெருமாள் ஆகியோராவர்.
இதற்கிடையில் இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய டத்தோ ஜொஹன் அப்துல் அஜிஸ் இதுபோன்ற
நிகழ்வுகளைத் தொடர்ந்து ஏற்பாடு செய்து வரும் ஐ.பி.எப். உலு லாங்காட் தொகுதியை வெகுவாகப்
பாராட்டினார். இந்த நிகழ்ச்சியை நடத்துவதன் முக்கிய நோக்கம் தீபாவளியன்று மக்களை
மகிழ்ச்சிப்படுத்துவதற்கே ஆகும். இதன் மூலம் அவர்களின் சிரமங்களைக் குறைத்து என்றென்றும்
மகிழ்ச்சியுடன் இருக்க வகை செய்ய முடியும் என்று கணேஷ்குமார் சம்பந்தன், ராஜம்மாள்
பெருமாள் ஆகியோர் தெரிவித்தனர்.


