புத்ராஜெயா நவ. 17 –
நவம்பர் 12 இரவு 7 மணிக்குப் புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையத்தில் ஆஸ்ட்ரோ வழங்கிய’ பத்மஸ்ரீ ஹரிஹரன்  லைவ் இன் புத்ராஜெயா’ மெல்லிசை நிகழ்ச்சியை 2,500-க்கும் மேற்பட்ட இரசிகர்கள் கண்டு  இரசித்தனர்.

பிரபல உள்ளூர் திறமையாளர்களான குமரேஷ் கமலக்கண்ணன் மற்றும் ஹஷ்மிதா செல்வம் ஆகியோரின் ‘நான் பிழை’ மற்றும் ‘என்னை கொஞ்சம் மாற்றி’ ஆகிய இரு பாடல்களை உள்ளடக்கியத் தொடக்கப் படைப்புடன் ஆனந்தா ராஜாராம்  தொகுத்து வழங்கிய இந்த இசை நிகழ்ச்சி தொடங்கியது.

தனது பிரபலமான பாடல்களான ‘அன்பே அன்பே கொல்லாதே’, ‘குறுக்கு சிறுத்தவளே’, ‘என்னை தாலாட்ட’, ‘வெண்ணிலவே வெண்ணிலவே’, ‘மலர்களே மலர்களே’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘இரவா பகலா’, ‘அரிமா அரிமா’, ‘உயிரே’ ஆகியவற்றை இரவின் நாயகன் பத்மஸ்ரீ ஹரிஹரன் பாடி அசத்தவே, இரசிகர்கள் மெய்மறந்து இரசித்தனர்.

பத்மஸ்ரீ ஹரிஹரனுடன் இணைந்து ஹரிப்ரியா மற்றும் ஸ்ரீ நிஷா உள்ளிட்டப் புகழ்பெற்ற இந்திய பின்னணிப் பாடகர்கள் பிரபல ஹிட் பாடல்களான ‘மல்லிப்பூ’, ‘மையா மையா’, ‘செந்தூரா’, ‘சௌக்கியமா’ மற்றும் ‘கொஞ்சம் நிலவு’ உள்ளிட்ட  பாடல்களைப் பாடினர்.

பத்மஸ்ரீ ஹரிஹரன் லைவ் இன் புத்ராஜெயா இசை நிகழ்ச்சியின் ஆதரவாளர் போ டீ (BOH Tea) மற்றும் வீனஸ் புரோடக்‌ஷன் இணைந்து வழங்கியது. மேல் விபரங்களுக்கு AstroUlagam.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.