கோலாலம்பூர், நவ.17
    2013ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரை இந்தியர்களுக்காக வழங்கப்பட்ட  சலுகைகளை முன்னாள் துணை அமைச்சர், டத்தோ லோக பாலா பட்டியலிட்டார்.

1.கம்போங் பண்டான், செந்தூல், புக்கிட் கியாரா பகுதிகளில் மொத்தம் 1,000 இந்தியர்களின் வீடமைப்பு மறுகுடியேற்றத்திற்காக தே.முன்னணி பல சலுகைகளை வழங்கியுள்ளதாகவும் குறிப்பாக புக்கிட் கியாரா மறுகுடியேற்ற வீடமைப்புத் திட்டத்தில் முதல் சந்ததியினருக்கு வெ.300,000 மதிப்புள்ள வீடு இலவசமாக வழங்கப்பட்டதாகவும் 2ஆம் சந்ததியினருக்கு அதே வீடுகள் வெ.175,000க்கு விற்கப்பட்டதாகவும் இதில் அனைவரும் வங்கியில் கடன் பெறத் தகுதியில்லாதவர்களாக இருந்ததால் அனைவருக்கும் அரசாங்கமே வட்டியில்லாதக் கடனை ஏற்பாடுச் செய்திருந்தது எனவும் டத்தோ லோக பாலா கூறினார்.

2.ஜிஞ்சாங் ரூமா பாஞ்சாங் வீடுகளுக்கு பதில் மறுகுடியேற்றம் செய்த 600    
இந்தியர்களுக்கு வெ.37,000க்கு வீடுகள் வழங்கப்பட்டன.

3.முறையான அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட 36 வீடுகள் உடைபடுவதிலிருந்து
நிறுத்தப்பட்டு அவற்றுக்கு நில மற்றும் வரைபட அனுமதியோடு மானியங்களும் வழங்கப்பட்டன.

4.கோலாலம்பூரிலுள்ள 15 தமிழ்ப்பள்ளிகளுக்கு வருடாந்திர மானியம் யாயாசான் விலாயா பெர்செக்குத்துவான் மூலமாக வழங்கப்பட்டது.

5.கோலாலம்பூரிலுள்ள தேசிய மாதிரி ஆரம்பத் தமிழ்ப்பள்ளிகள், தேசிய மாதிரி ஆரம்பச் சீனப்பள்ளிகளுக்குச் சாலைகள் மற்றும் கட்டடங்களைப் பழுது பார்க்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

6.கோலாலம்பூர் மாநிலம் முழுவதும் இந்தியப் பண்டிகைகளின் போது திறந்த இல்ல உபசரிப்புகள் நடைபெற்றன.

7.இந்தியர்கள் நிர்வாக இயக்குநர் என்ற உயர் பதவியில் அமர்த்தப்பட்டனர்.

8.ஆலயங்களில் இந்தியர்கள் வணிகம் செய்வதற்கான இடங்கள் வழங்கப்பட்டன.

9.சீனர்கள், இந்தியர்களுக்கு பொது வீடமைப்புகள் உருவாக்கப்பட்டன. 

10.பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியா மாபெரும் அளவில் விரிவுபடுத்தப்பட்டது.

11.கோலாலம்புர் மாநகர் மன்றத்தில் இந்தியர்கள் 2 பேருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன.