சுங்கைப்பட்டாணி, நவ. 17-

சாய் நந்தினி திரை உலகம் ஏற்பாட்டில் கடார இந்தியர் திரைப்படச் சங்கம் ஆதரவில் மலேசிய சுற்றுலா, கலை, பண்பாடு அமைச்சு, மலேசிய தொடர்பு பல்லூடக அமைச்சு மற்றும் மலேசியன் இந்தியர் காங்கிரஸ் (மஇகா) ஒத்துழைப்போடு “சோழன் திரை விழா 2022” எனும் திரைப்பட விழா கடந்த 12ஆம் தேதி மாலை மணி 6.00 தொடக்கம் ஜேட் கார்டன், பண்டார் அமான் ஜெயா, சுங்கைப் பட்டாணி, கெடாவில்  மிகவும் விமரிசையாகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் 35 “குறும்படம், இசை வீடியோ, தொலைப்படம்” சார்ந்த விருதுகளும் சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன.

மலேசியாவில் இந்தியத் திரைத் துறை கலைஞர்களுக்கு நடத்தப்படும் ஒரே சினிமா விருது நிகழ்ச்சி இதுவே.

இந்த நிகழ்ச்சி சுவையான விருந்து உபசரிப்புடன் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அயல் நாட்டைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட சினிமா கலைஞர்கள், கலை ஆர்வலர் ர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

நம் நாட்டுச்  சினிமாவுக்கும் கலைத் துறைக்கும் மிகப் பெரிய ஆதரவு நல்கி வாழ்த்தினர்.

மலேசியத் திரைப்பட வாரியத் தலைவர் ( FINAS ), இந்தத் திரைப்பட விழாவை ” ஓர்  அதிகாரப்பூர்வ அங்கீகாரம் ” பெற்ற நிகழ்வாகத் தாம் பரீசீலனை செய்வதாக உறுதி அளித்தார்.

வந்திருந்த அனைவரும் இறுதி வரை அமர்ந்து இந்த நிகழ்வை இரசித்தது மிகவும் ஆனந்தமாகவும் தன்முனைப்பாகவும் அமைந்தது.

அதே வேளையில் இந்தச் ” சோழன் திரை விழா ” மாபெரும் வெற்றி அடைய ” சாய் நந்தினி திரை உலகம் – SNMW ” குழுமத்துடன் தோளோடு தோள் நின்று அயராது உழைத்துப் பணிகளைச் செவ்வனே செய்து முடித்துள்ளது.

இதன் பொருட்டு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து தரப்பினருக்கும் பாராட்டுகளையும் நன்றிகளையும்  தெரிவித்துக் கொள்கிறார்  ‘SNMW’  நிறுவனர் முனைவர் இரா.  இலட்சப்பிரபு.