தாப்பா, நவ.20-

15 ஆவது பொதுத் தேர்தலில் தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் 5,545வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

இத்தேர்தலில் டத்தோ சரவணன் மொத்தம் 18,246 வாக்குகள் பெற்ற வேளையில்  இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சரஸ்வதி கந்தசாமி  12,702 வாக்குகளையும் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் முகமது யாட்சான் முகமது 12,253 வாக்குகளையும் பெற்றனர்.

இத்தேர்தலில் வெற்றி பெற்றதன் வழி சரவணன் நான்காவது தவணையாக இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.