கோலாலம்பூர், நவ.20-

நடந்து முடிந்த நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) கட்சித் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின், மூடா கட்சித் தலைவர் சைட் செடிக் சைட் அப்துல் ரஹ்மான்  மற்றும் முன்னாள் சுகாதார அமைச்சரான டாக்டர் சுல்கிப்ளி அகமது ஆகியோர் தங்கள் தொகுதிகளைத் தக்க வைத்துக் கொண்டனர்.

பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் போட்டியிட்ட  டான்ஸ்ரீ முகைதீன் யாசின் 9ஆவது தவணையாக தனது பாகோ தொகுதியைத் தக்க வைத்துக் கொண்ட வேளையில்  சைட் செடிக் இரண்டாவது தவணையாக தனது  மூவார் தொகுதியைத்  தக்க வைத்துக் கொண்டார்.

கோல சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட டாக்டர் சுல்கிப்ளி 1,002 வாக்குகள் பெரும்பான்மையில் 31,033 வாக்குகளுடன்  வெற்றி பெற்று  தனது தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட டத்தோஸ்ரீ தெங்கு ஸாஃப்ருல் தெங்கு அப்துல் அஜிஸுக்கு 30,031 வாக்குகள் கிடைத்த வேளையில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் முகமது நோர் ஷாஹார் 23,639 வாக்குகள் கிடைத்தன.