ஒரு கலைஞனின் டைரி தொடரை இயக்கியதற்கான உங்களின் உத்வேகத்தைப் பகிர்ந்துக் கொள்ளவும்.
போதைப்பொருள் பழக்கத்தினால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் அதனால் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் மீது ஏற்படும் விளைவுகள் பற்றியத் தாக்கத்தை ஏற்படுத்தும் கதையை வழங்குவதே எனது உத்வேகம். இந்தத் தொடர் உள்ளூர் கலைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் எடுத்துக்காட்டுகிறது. போதைக்கு அடிமையானக் கதாப்பாத்திரத்தில் நடித்த ரவின், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கதாப்பாத்திரத்திற்குப் பொருந்த உடல் எடையைக் குறைப்பதோடு முன்னாள் அடிமைகளுடன் பேச வேண்டியிருந்தது. இசையமைப்பின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ள ரவின் உள்ளூர் இசையமைப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் பாடகர் ஷேன் எக்ஸ்ட்ரீமுடன் ஒரு மாதப் பயிற்சியில் ஈடுப்பட்டார். எல்லா நடிகர்களும் தங்கள் கதாப்பாத்திரங்களை நன்றாக நடித்திருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். ஒரு கலைஞனின் டைரி தொடரில் எட்டு அற்புதமானப் பாடல்கள் இருந்தன, அவை கதையை இயக்க உதவியது. இப்பாடல்கள் தனித்துவம் வாய்ந்ததாகவும், சர்வதேச அளவிற்க்கு ஈடாக இருந்ததை நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்தேன். பல உணர்ச்சிகள் மற்றும் காலக்கெடுவுடன் ஒரு கலைஞனின் டைரி தொடரின் கதையும் திரைக்கதையும் சற்றுச் சவாலாக இருந்தன.

ஒரு கலைஞனின் டைரி தொடரை இயக்கிய உங்களின் குறிப்பிடத்தக்க நினைவுகளைப் பகிர்ந்துக் கொள்ளவும்?
எனக்கு இரண்டுக் குறிப்பிடத்தக்க நினைவுகள் உள்ளன. ஸ்பெஷல் கேர் ஆதறவற்றோர் இல்லத்தில் இரண்டு நாள் படப்பிடிப்பை நடத்தியது முதல் குறிப்பிடத்தக்க நினைவாகும். அங்குள்ளக் குழந்தைகள் உண்மையிலேயே என் இதயத்தைக் கவர்ந்தனர். அவர்களின் வருகையை நான் மிகவும் சிறப்பாக உணர்கிறேன். அவர்களில் சிலருக்கு நகரக்கூட முடியவில்லை. அது என்னை மிகவும் பாதித்தது. இந்த அற்புதமானக் குழந்தைகளைப் போதுமான அளவு இந்தத் தொடர் முன்னிலைப்படுத்தியது என்று நம்புகிறேன். இரண்டாவது இனிமையான நினைவு எட்டு நிமிடக் காட்சியாகும். அனைத்து நடிகர்களுக்கும் என்னச் செய்ய வேண்டும் என்பது விளக்கப்பட்டது. ஆனால் காட்சிக்குத் தேவையான ஆற்றல் காரணமாக ஓர் ஒத்திகையைச் செய்ய முடியவில்லை. நான்கு நடிகர்களின் மிகச்சிறந்த நடிப்புடன் இந்த எட்டு நிமிடக் காட்சித் தூய மகத்துவமாகும். நாங்கள் அதை ஒரே ஷாட்டில் செய்தோம். எல்லோரும் உற்சாகமடைந்தனர், அவர்களில் ஒருவர் கூட அழுதார்.

ரவின் ராவ் சந்திரன் & கிருத்திகா நாயர், நடிகர்கள்:
இந்தத் தொடரில் உங்களின் கதாப்பாத்திரத்தையும் நிஜ வாழ்க்கையில் தொடர்புப்படுத்தக்கூடிய உங்களின் கதாப்பாத்திரத்தின் சிலப் பகுதிகளையும் பற்றிக் கூறுங்கள்.
ரவின்: சவால்கள் இருந்தாலும் ஒரு அறிமுக முன்னணி நடிகருக்கு வருண் ஒரு கனவுக் கதாப்பாத்திரம் என்று நான் கூறுவேன். இந்தக் கதை என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. மேலும், எனதுச் சொந்த வாழ்க்கைப் பயணத்துடன் கூட இக்கதையை என்னால் தொடர்புப்படுத்த முடியும். நான் இடைநிலைப் பள்ளியில் படிக்கும் போதுக் கலைத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். நான் மட்டுமல்ல, இரசிகர்களும் இந்தக் கதாப்பாத்திரத்துடன் அவர்களைத் தொடர்புப்படுத்த முடியும்.
கிருத்திகா: கமலி, எப்போதும் என் மனதுக்கு நெருக்கமான ஒரு கதாப்பாத்திரம். நடிப்பின் பல்வேறுப் பரிமாணங்களை எனக்குக் கற்றுக் கொடுத்தக் கதாப்பாத்திரம். கமலி கதாப்பாத்திரத்தைப் பாலா சார் செதுக்கினார். நான் எனதுப் படைப்பை மட்டுமே வழங்கினேன்.

ஒரு கலைஞனின் டைரி தொடரில் நடித்த உங்களின் அனுபவம் எவ்வாறு இருந்தது?
ரவின்: மறக்க முடியாத அனுபவம் என்றுதான் கூறுவேன். படப்பிடிப்பிற்கு முன்பே இயக்குநரும் நானும் மறுவாழ்வு மையங்களுக்குச் சென்று, முன்னாள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுடன் நேரில் உரையாடி அவர்களின் கதைகளைத் தெரிந்துக் கொண்டோம். கதாப்பாத்திரத்தைச் செவ்வென நடிக்க இது எனக்கு உதவியது.

உள்ளூர் இசையமைப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் பாடகர் ஷேன் எக்ஸ்ட்ரீமிடம் ஒரு மாதத்திற்கும் மேலாக ஓர் இசைக்கலைஞர்/இசையமைப்பாளரின் குணாதிசயங்களையும் கற்றுக்கொண்டேன். உடல் எடையைக் குறைக்க சுமார் ஆறு கிலோகிராம் இழந்தேன். எனது உடல் எடையைக் குறைக்கும் பயணத்தின் போது என்னை நன்றாகக் கவனித்துக் கொண்ட ஒரு கலைஞனின் டைரி குழுவிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு கலைஞனின் டைரி தொடரிலுள்ள ஒவ்வொருவரின் உழைப்புக்கும் அன்புக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்தத் தொடருக்கான அன்பிற்கும் ஆதரவிற்கும் இரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் – நாங்கள் அதை மிகவும் பாராட்டுகிறோம். இனி வரும் காலங்களில் உங்கள் அனைவரையும் நிச்சயமாக மகிழ்விப்பேன்.


கிருத்திகா: இந்தக் கதாப்பாத்திரம் சவாலானதாக இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. இதுப்போன்றப் பலக் கதாப்பாத்திரங்களை நான் நடித்துள்ளேன். எனவே, நான் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால், நான் ஒத்திகையை ஆரம்பித்தத் தருணத்தில், பாலா சார் என்னிடமிருந்து வித்தியாசமான நடிப்புப் பாணி, குரல் தொனி மற்றும் பழக்கவழக்கங்களை விரும்புகிறார் என்பதை அறிந்துக் கொண்டேன். எனது முந்தையக் கதாப்பாத்திரங்களைப் போல எனது நடிப்புச் சமமாக இருப்பதை அவர் விரும்பவில்லை. நான் மென்மையானத் தொனியில் பேச வேண்டியிருந்தது. நான் பேசும்போது என் புருவங்களை உயர்த்தக்கூடாது, அது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. ஏனென்றால் நிஜ வாழ்க்கையில் கூட நான் பேசும்போதுப் புருவங்களை உயர்த்துவது வழக்கம். ஒட்டுமொத்தக் குழுவுடன் பணிபுரிந்த அனுபவம் அற்புதமானது. மிகவும் திறமையானக் குழுவுடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.