பாகான், நவ. 23-
நாட்டின் மாற்றத்தை நோக்கியிருக்கும் பாகான் வாக்காளர்களின் மனநிலையைத் தான் உண்மையில் ஏற்றுக் கொள்வதாக மசீச பினாங்கு மாநில தொடர்பு குழு உதவி தலைவர்  டான் சுவான் ஹோங் தெரிவித்தார்.
 

அதே வேளையில், பக்காத்தான் ஹராப்பானின் ஜசெக வாக்குகள் அடிப்படையிலான கொள்கைகளைப் புறக்கணிப்பதோடு வறிய நிலையில் உள்ள மக்களின் நலனுக்காக கொள்கைகளை வரைய வேண்டும் என்று மசீச பாகான் டிவிஷன் தலைவருமான சுவான் ஹோங் கேட்டுக் கொண்டார்.

தனக்கு வாக்களித்த பாகான் வாக்காளர்களுக்கு சுவான் ஹோங் அறிக்கை ஒன்றின் வழி ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தார்.

அண்மைய காலமாக பாகான் தேசிய முன்னணியும் மசீசவும் “மக்களின் பிரச்சினைகளைக் கேட்டு அவற்றிக்கு ஆக்ககரமான வகையில் தீர்வு கண்டன. எனினும், பாகான் வேட்பாளர்கள் 15 ஆவது பொதுத் தேர்தலில் மாற்றத்தை விரும்பினர்.

எது எவ்வாறாயினும் பாகான் மசீச உதவி கோரி வரும் மக்களுக்கு ”  தேசிய முன்னணி – மசீச உங்கள் பக்கமே “என்று கூறி வருகிறது. மக்களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

“நம்மால் முடியும்” எனும் பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் சுலோகத்திற்கு ஏற்ப இன்னும் சில தினங்களில் இதனைக் காண முடியும் என்று பாகான் மசீச நம்பிக்கை தெரிவித்தது.

பாகான் வாக்காளர்கள்  புறக்கணிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த இத்தொகுதி மக்களுக்கு ஜசெக வர்த்தக வாய்ப்புகளையும் வளப்பத்தையும் கொண்டு வரும் என்று பாகான் மசீச நம்புவதாகவும் சுவான் ஹோங் கூறினார்.