கோலாலம்பூர், ஜன. 19-
‘டான்ஸ் பேபி டான்ஸ்’ எனும் குழந்தைகளின் நடனப் போட்டியின் ஆடிஷன் இப்போது திறக்கப்பட்டுள்ளது
ரிம4400 ரொக்கப் பரிசில் ஒரு பங்கை வெல்லும் வாய்ப்பைப் பெறுங்கள்.

‘டான்ஸ் பேபி டான்ஸ்’ போட்டியைப் பற்றிய  சில விபரங்கள்:

ஜனவரி 29, 2023 வரை  நடைபெறும் ‘டான்ஸ் பேபி டான்ஸ்’ எனும் ராகா நடனப் போட்டியின் ஆடிஷனில் இன்ஸ்டாகிராம் வாயிலாகப் பங்கேற்க 5 முதல் 10 வயது வரையிலான திறமையான மலேசிய குழந்தைகள் அழைக்கப்படுகிறார்கள்.
போட்டியில் பங்கேற்க, ஆர்வமுள்ள போட்டியாளர்களின் பெற்றோர்கள் ராகா அகப்பக்கத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாடலுக்குப் போட்டியாளர் நடனமாடும் ஒரு நிமிடக் காணொளியை இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்ற வேண்டும்.

நடனக் காணொளியைப் பதிவேற்றம் செய்யும் போது பெற்றோர்கள் போட்டியாளரின் முழுப் பெயர், வயது மற்றும் #RAAGADanceBaby என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்த வேண்டும். மேலும், @raaga.my-ஐயும் டேக் (tag) செய்ய வேண்டும்.

போட்டியின் காலக்கட்டத்தில் பங்கேற்பாளர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் ‘பொதுவாக’ அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
பெறப்பட்டச் சமர்ப்பிப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து போட்டியாளர்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, பிப்ரவரி 18, 2023 அன்று மைடின் சுபாங் ஜெயா ஹைப்பர் மார்க்கெட்டில் நடைபெறும் இறுதிச் சுற்றில் போட்டியிட அழைக்கப்படுவார்கள்.

‘டான்ஸ் பேபி டான்ஸ்’ போட்டியின் ஒவ்வொரு பிரிவு வெற்றியாளரும் முதல் நிலைக்கு ரிம1000, இரண்டாம் நிலைக்கு ரிம700 மற்றும் முன்றாம் நிலைக்கு ரிம500 ரொக்கப் பரிசுகளை வீட்டிற்குத் தட்டிச் செல்வர்.

‘டான்ஸ் பேபி டான்ஸ்’ பற்றிய மேல் விபரங்களுக்கு ராகாவைப் பின் தொடர்க.