புக்கிட் கட்டில், பிப்.11-
மலாக்கா முத்தமிழ் மன்ற ஏற்பாட்டில் வரும் 19.2.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00க்கு எண் 31 ஜாலான் S I 8 தாமான் சாவுஜானா இண்டா புக்கிட் கட்டில், மலாக்காவில் அமைந்திருக்கும் அகத்தியர் சன்மார்க்க மண்டபத்தில் திருவண்ணாமலை பரதேசி பஞ்சயோக ஞானி ராஜரிஷி சித்தானந்தாஜி அவர்களின் சந்திப்பு நிகழ்வு நடைபெறும்.
கோபாலாக மலேசியா மண்ணில் பிறந்து தெளிவின் தேடலில் ஊன்றி கோபால்ஜீயாக , கோபால் சுவாமிஜீயாக , சித்தானந்தராக , திருண்ணாமலை பரதேசியாக , பஞ்சயோக ஞானியாக , ஹீலஹீ சித்தானந்தாஜியாக உனனதமாக இன்று ஆன்மீகத்தில் அறிவுத்தேடல் , அறிவியல் தேடலில் ராஜரிஷியாக கெளரவிக்கபட்டிருக்கிறார் சித்தானந்தாஜி அவர்கள்.
நாளைய சமுதாயத்தின் தூண்களாக விளங்கும் இளையோரிடையே ஆன்மிக எழுச்சியினை உருவாக்கப் பிறந்த சித்தர் பெருமான் இவர். எனவே இப்படிப்பட்ட தலைசிறந்த சுவாமிஜி நம்மைச் சந்திப்பது மிகவும் பாக்கியம். முற்றிலும் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த சந்திப்பு நிகழ்வுக்கு மன்ற நிர்வாக உறுப்பினர்கள் ,அங்கத்தினர்கள் , மற்றும் போது மக்கள் அனைவரும் வருகை தந்து சுவாமிஜியின் அருளைப் பெறும்படி மன்றத் தலைவர் ஆர்.எஸ். .ரகு கேட்டுக் கொள்கின்றார். மேல் விவரங்களுக்கு. ரகு 0123655928 , துணைத்தலைவர் கே. சுப்யையா 0196085813.
