spot_img
12.6 C
London
spot_img
Home சமூகம் எம்.ஐ.இ.டி வழி 518 மாணவர்களுக்கு வெ. 1கோடியே 72 லட்சம் உபகார சம்பளம்...

எம்.ஐ.இ.டி வழி 518 மாணவர்களுக்கு வெ. 1கோடியே 72 லட்சம் உபகார சம்பளம் & கடனுதவி

0
284

கோலாலம்பூர், பிப்.17-

மஇகாவின்  கல்வி கரமான மாஜூ கல்வி  மேம்பாட்டு கழகம் (எம்.ஐ.இ.டி) தகுதி பெற்ற 518 மாணவர்கள் தங்கள் மேற்கல்வியைத் தொடரும் வகையில்1கோடியே 72 லட்சத்து 54 ஆயிரத்து 186 வெள்ளி மதிப்பிலான உபகார சம்பளம் மற்றும் கல்வி  கடனுதவிக்கான காசோலைகளை வழங்கியது.

தலைநகர் செந்தூல், எச்ஜிஎச் மாநாட்டு மையத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் எம்.ஐ.இ.டி தலைவரும் மஇகா தேசிய தலைவருமான  டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ  ச. விக்னேஸ்வரன் இந்த  காசோலைகளை மாணவர்களுக்கு வழங்கினார்.

கடந்த 1984 ஆம் ஆண்டு தொடங்கி  எம்.ஐ.இ.டி  இதுவரை 12,488 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உயர் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு  கல்வி, உபகாரச் சம்பளம்  மற்றும் கடனுதவிகளை வழங்கியுள்ளது.

அவ்வகையில் 2023 ஆம் ஆண்டுக்கு மருத்துவம்  154பேர், மருந்தியல் 88பேர், பல் மருத்துவம் 56பேர், உயர்கல்விக்கான  அடிப்படை கல்வி 81பேர், தகவல் தொழில்நுட்பம் 5பேர், கணக்கியல் 3 பேர், சட்டம் ஒருவர், மற்ற துறைகள் 6 பேர் என மொத்தம் 394 மாணவர்களுக்கு 1 கோடியே 52 லட்சத்து 8,881 வெள்ளி பெறுமானமுள்ள  கல்வி உபகார சம்பளம் வழங்கப்பட்டது.

இவர்களில் எஸ்டிபிஎம் மற்றும் மெட்ரிகுலேஷன் தேர்வில் மிகச் சிறந்த புள்ளிகள் பெற்று தற்போது  ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் பயிலும் 26 மாணவர்களும்  அடங்குவர்.

மேற்கண்ட துறைகளோடு  விமான போக்குவரத்து, பொறியியல், கல்வி, வர்த்தகம், விண்வெளி போன்ற துறைகளைச் சேர்ந்த 128 மாணவர்கள்   20 லட்சத்து 45ஆயிரத்து 305 வெள்ளி மதிப்புள்ள கல்வி கடனுதவியைப் பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் எம்.ஐ.இ.டி அறங்காவலரும் மஇகா தேசிய துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன், மஇகா தேசிய உதவி தலைவர்கள் டத்தோஸ்ரீ எஸ் வேள்பாரி, டத்தோ முருகையா, டத்தோ கோகிலன் பிள்ளை, டத்தோ அசோஜன் ஆகியோரோடு டான்ஸ்ரீ மாரிமுத்து, ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக பொறுப்பாளர்கள், எம்.ஐ.இ.டி அறங்காவலர்கள், மஇகா உயர்நிலை பொறுப்பாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.